என்னது மோடி உபி முதல்வராக இருந்தாரா.. உளறி கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்.. ஷாக்கான நயினார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. தேர்தல் என்றாலே அனல் பறக்கும் பிரச்சாரங்கள், பரபரப்பு, கூடவே அரசியல் கட்சி தலைவர்களின் நகைச்சுவையான பேச்சு இருப்பது வழக்கம். சில நேரங்களில் நிர்வாகிகள் குழப்பத்தில் மாற்றி பேசுவதும் உண்டு. அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நயினார் நாகேந்திரன் முன்னிலையிலேயே, மோடி 3 முறை உபி முதல்வராக இருந்தார் என்றும், அமித்ஷா அந்தக் கட்சியை தொடங்கினார் என்றும் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி களத்தில் வேகம் காட்டி வருகின்றன. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு அமைதியாக இருந்த தவெக இப்போது மீண்டும் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளது.

modi-was-3-time-cm-to-up-said-dindigul-srinivasan

திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை

நாம் தமிழர் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்று கூறி களத்தில் பணியாற்றி தொடங்கிவிட்டது. அதேபோல பிரதான கட்சிகள் அனைவருமே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் தொகுதி வாரியாக தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் கலந்து கொண்டார். சீனிவாசன் பேசும்போது, "பிரதமர் நரேந்திர மோடி அருமையான ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மூன்று முறை முதலமைச்சராக உத்தரப்பிரதேசத்தில் இருந்தார்.

மோடி.. அமித்ஷா

இன்றைக்கு நம் நாட்டையும் பிரதமராக மூன்றாவது முறையாக ஆண்டு கொண்டிருக்கும் அருமையான தலைவர் அவர். இன்றைக்கு எந்த உலகத்திற்கு சென்றாலும், எந்த தலைவரை பார்த்தாலும் பஞ்சாயத்து என்றால் மோடிஜி தான் முன்னிலை வகிப்பார்.ரஷ்யா - உக்ரைன் போராக இருந்தாலும் சரி, மற்ற நாடுகளின் பிரச்சனையாக இருந்தாலும் சரி உலக நாடுகள் அவரைத்தான் அழைத்து பஞ்சாயத்து பேசுகிறார்கள்.

நியாயமாக பேசுவார். பல கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றவர் என்கிற மதிப்பு அவர் மீது இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.அதிமுக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. நம்முடைய அமித்ஷா ஜி இந்தக் கட்சியை ஆரம்பித்தபோது, தம்பி நயினார் நாகேந்திரன், தம்பி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தம்பி அண்ணாமலை அவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன.

பாவம் நயினார்

இந்தக் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறியவர் அமித்ஷா ஜி." என்றார். திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இடையில் அவர் எல்.முருகன், அண்ணாமலை பெயரை சொல்வதற்கு முன்பு நயினார் நாகேந்திரனிடம் ஏதோ உறுதிபடுத்திவிட்டு பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+