பொய் புகார் கொடுத்த நிகிதா? அரசு கல்லூரி ஹெச்ஓடியா? திடீரென காலேஜுக்கு விஜயம்! கூட வந்த 2 பேர்!
திண்டுக்கல்: சிவகங்கையில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் இருப்பதாக புகார் வெளியானது. இந்த நிலையில் நீண்ட விடுமுறைக்கு பிறகு நிகிதா தனது பேராசிரியர் பணிக்கு திரும்பி இருக்கிறார். திண்டுக்கல் அரசு எம்விஎம் மகளிர் கல்லூரியில் அவர் தாவரவியல் துறை தலைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மனப்புரத்தில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் தனது தாயுடன் சென்றார்.
தொடர்ந்து தங்களது காரை பார்க்கிங் செய்ய வேண்டுமென அஜித்குமாரிடம் அந்த பெண் சொன்னதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கூட்ட நெரிசல் காரணமாக தாங்கள் அணிந்திருந்த 10 சவரன் நகையை அந்த பெண்ணும் காரில் வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே கோவிலுக்கு சென்று விட்டு பார்த்தபோது காரின் பின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என அந்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.
இதை அடுத்து கோவில் ஊழியர்கள் அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து இருக்கின்றனர். திருப்புவனம் குளம் அருகிலும், கோவில் வளாகத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் வைத்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் அஜித்குமாரின் சகோதரரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் காவல்துறை விசாரணையில் இருந்தபோது அஜித்குமார் உயிரிழந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டர். இந்த நிலையில் அஜித்குமார் மரணம் தமிழக அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜித்குமார் மீது பொய்யான புகார் அளித்ததாகவும், புகார் தந்த நிகிதா மீது பல்வேறு பண மோசடி புகார்கள் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து நிகிதா தலைமறைவாகிவிட்டதாகவும் சொல்லப்பட்ட நிலையில் தன் மீது என்ற குற்றச்சாட்டும் இல்லை என அவர் மறுத்தார். ஆனால் நிகிதா தன்னை ஏமாற்றியதாக திருமாறன் உள்ளிட்ட பலர் புகார் கொடுத்திருக்கின்றனர். திருமணம் செய்து அவர்களிடம் விவாகரத்து பெற்று பணம் பெற்று மோசடி செய்வதுதான் நிகிதாவின் வேலை எனவும் புகார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நிகிதா தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா திண்டுக்கல் அரசு எம்விஎம் மகளிர் கலைக்கல்லூரியில் பணியாற்றி வருவது தெரிய வந்தது. தற்போது தாவரவியல் துறை தலைவராக இருக்கும் அவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றதாக சொல்லப்படுகிறது.
நிகிதா மீது ஏற்கனவே மாணவ மாணவிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் புகார் கொடுத்திருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தான் பூங்கொடி மருத்துவ விடுப்பில் சென்ற நிலையில், தற்போது அஜித்குமார் விவகாரத்தில் சிக்கி திடீரென மீண்டும் பணிக்கு திரும்பி இருக்கிறார்.
கடந்த பத்து தினங்களாக விடுமுறையில் சென்ற நிகிதா இன்று 07.07.25 விடுமுறை முடிந்து காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வருகை தந்தார். பின்னர் தனது அன்றாட பணிகளை செய்து வருகிறார். வகுப்பறைக்கு சென்று மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பணிக்கு வந்த நிகிதா தன்னோடு இரண்டு ஆண்களை கல்லூரிக்குள் அழைத்து வந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்ற நிலையில், கல்லூரிக்குள் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications