திண்டுக்கல்லில் அட்டகாசமான 'ஆஃபர்'.. வெங்கடேசனுக்காக உருகிய நகைக்கடைக்காரர்.. வேள்பாரி நினைவிருக்கா?
வேள்பாரி எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்பியின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் நகைக்கடை உரிமையாளர் அதிரடி ஆஃபர் அறிவிப்பு
திண்டுக்கல்: எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான சு.வெங்கடேசன் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக திண்டுக்கல்லை சேர்ந்த நகைக்கடை வியாபாரி ஒருவர் அதிரடி ஆஃபர்களை அறிவித்திருக்கிறார்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் வார இதழ் ஒன்றில் தொடரா வெளியானது வேள்பாரி எனும் வரலாற்று புதினம். வழக்கமாக வரலாற்று தொடருக்கு என சில வாசகர்கள் இருப்பார்கள். இந்த வாசகர்கள் நிலையானவர்களாக இருப்பார்கள். அதாவது 50-லிருந்து 100 பேர் வரை தொடக்கத்தில் இந்த தொடருக்கான வாசகர்களாக உருவெடுப்பார்கள். குறிப்பாக வாசகர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டினாலே பெரிய விஷயம். இப்படி இருக்கையில் வேள்பாரிக்கு தொடக்கம் முதலே 200க்கும் அதிகமான வாசகர்கள் உருவானார்கள்.
இதுதான் இந்த தொடரின் ஆரம்ப வெற்றி. இதன் பின்னர் இத்தொடருக்காகவே பலர் அந்த வார இதழை வாங்க தொடங்கினர். பின்னர் வியாழக்கிழமை தோறும் தொடர் குறித்து விரிவாக சோஷியல் மீடியாக்களில் எழுத தொடங்கினர். இந்த ரசிகர்கள் நாளடைவில் 'வேள்பாரி வாசகர் வட்டமாக' உருவாகினர். இந்த புத்தகத்தை சாமானிய மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது இவர்கள்தான். ஒரு கட்டத்திற்கு பின்னர் இந்த தொடர் முடிவடைந்து புத்தகமாக வெளியான நிலையில், அமோக வரவேற்பு இருந்தது.

வேள்பாரி
தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் வாசகர்களும் இந்த புத்தகத்தின் ரசிகர்களானார்கள். வரலாற்று புதினங்கள் பல இதற்கு முன்னர் எழுதப்பட்டிருந்தாலும், ஏன் வேள்பாரி மட்டும் கொண்டாடப்படுகிறது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு சு.வெங்கடேசனே இப்புத்தகத்தின் முன்னுரையில் பதிலளித்திருந்தார். அதாவது, "இயற்கையை அழிக்க துடிக்கும் மூவேந்தர் மன்னர்கள். இதனை காக்க துடிக்கும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒரு கூட்டத் தலைவன். இவர்கள் இருவருக்கும் நடைபெறும் மோதல்தான் இக்கதை. இது இயற்கைக்கும், மனித பேராசைக்கும் இடையே நடக்கும் மோதலின் கதை" என்று சு.வெங்கடேசன் விவரித்திருந்தார்.

ஆஃபர்
எனவே வழக்கமான லாஜிக் இல்லாத தந்திர காட்சிகளையும் தாண்டி நாவலில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொடர்பான விவரங்கள் விரிவாக பட்டியலிடப்பட்டன. வேள்பாரி வாசகர்கள் இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்தனர். அதேபோல பொன்னியின் செல்வன் படத்தை போலவே, வேள்பாரியையும் திரைக்கதையாக மாற்ற பல சினிமா இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில்தான் திண்டுக்கல்லை சேர்ந்த வேள்பாரியின் தீவிர வாசகர்கள் ஒருவர் அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளார். இவர் நகைக்கடை ஒன்றை நிலக்கோட்டையில் வைத்திருக்கிறார்.

காரணம்
அதாவது வேள்பாரி எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது கடையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை என்று அறிவித்துள்ளார். இந்த ஆஃபர் 916 ஹால்மார்க் நகைகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும், 15ம் தேதியிலிருந்த 17ம் தேதி வரை இந்த ஆஃபர் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். நிலக்கோட்டையின் மு.வ.மாணிக்கம் அன் கோ தங்க நகைக்கடையின் உரிமையாளர்தான் இந்த ஆஃபரை அறிவித்து மாவட்டம் முழுவதும் போஸ்ட்டரை ஒட்டியுள்ளார். வழக்கமாக சினிமா நடிகர்/நடிகைகளின் பிறந்தநாள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் போன்றவற்றிக்குதான் இதுபோன்று ஆஃபர்கள் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில்
ஆனால், ஒரு எழுத்தாளருக்காக இதுபோன்ற ஆஃபர்கள் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படுவது மிகவும் அரிதானதாகும். இந்த கலாச்சாரம் ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. அப்போதிருந்த எழுத்தாளர்களை வாசகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஜெயகாந்தன், சுஜாதா, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன் என எழுத்தாளர்கள் பட்டியல் நீண்டது. இதில் ஜனரஞ்சகமான எழுத்தாளர்களை வாசகர்கள் தங்களது ஆதர்ச நாயகனாக சித்தரித்துக்கொண்டனர். கேரளாவில் தற்போதுவரை எழுத்தாளர்கள் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது. 'பஷீர்' என்றால் கேரளாவில் யாருக்கும் தெரியாது என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் இப்போதும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications