Oneindia Tamil செய்தி வெளியான மறுநாளே.. பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பை தடுக்க களமிறங்கிய தமிழக அரசு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பில்லநாயக்கன்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் மம்ப்ஸ் (MUMPS) நோயால் பாதிக்கப்பட்ட செய்தியை "ஒன்இந்தியாதமிழ்" பிரத்யேகமாக வெளியிட்ட நிலையில், அடுத்த நாளே, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பில்லநாயக்கன்பட்டி கிராமத்தை நேரில் பார்வையிட்டு மருத்துவ முகாம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மம்ப்ஸ் என்னும் பொன்னுக்கு வீங்கி நோய் பரவல் அதிகரித்து வருகிறது. கிராமங்கள், நகரங்கள் என்று அனைத்து பகுதிகளிலும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இந்த நோய் பரவல் அதிகரித்து வந்தது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகே உள்ள பில்லநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் அதிகமான குழந்தைகள் மம்ப்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என்று ஒரே தெருவில் 10க்கும் அதிகமானோருக்கு இந்த பாதிப்பு இருந்தது. இதனை பெற்றோர் அம்மை பாதிப்பு, கன்னத்து அம்மை பாதிப்பு என்று கருதி சாதாரணமாக வேப்பிலை, மஞ்சள் அரைத்து கன்னத்தில் தடவி மருத்துவமனைக்கு செல்லாமல் தவிர்த்து வந்தனர். ஒரே பள்ளியில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட முறையான சிகிச்சை எடுப்பதை தவிர்த்து வந்துள்ளனர்.

காற்றில் எளிதாக பரவக்கூடிய மம்ப்ஸ் நோய், ஒருவருக்கு வந்தால் அவர்களின் காதுக்கு முன்பாக இருபுறமும் உமிழ்நீர் சுரப்பியின் வீக்கமே அறிகுறியாகும். காதுக்கு கீழே வவி ஏற்படும், அதேபோல் காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். ஒருவர் மூலமாக 12 பேருக்கு பரவக்கூடியது இந்த மம்ப்ஸ் நோய். இந்த நோய் பரவல் குறித்து "ஒன்இந்தியாதமிழ்" சார்பாக நேற்று செய்தி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து Oneindia Tamil செய்தி எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் சார்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது. இந்த செய்தி வெளியான பின்னர், மாவட்ட சுகாதாரத்துறை சார்பாக கிராமத்தை நேரில் பார்வையிட்டு மருத்துவ முகாம் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை வெள்ள பாதிப்பு நேரத்தில், உதவி தேவைப்படும் மற்றும் உதவி கொடுக்கும் மக்களிடையே இணைப்பு பாலமாக ஒன்இந்தியாதமிழ் செயல்பட்டதாக இருக்கலாம், மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதாக இருக்கலாம், பொதுமக்களின் நலப் பணியில் ஒன்இந்தியாதமிழ் என்றுமே சமரசம் இன்றி செயல்பட்டு வருகிறது. இந்த பணி தொடரும் என்றும் மகிழ்ச்சியுடன் வாசகர்களுக்கு, உறுதியளிக்கிறோம்.

-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications