Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபனிங்லயே எண்ட் கார்டா? பழனியில் கூடிய பஞ்சாயத்து! ஐபி, ஐபிஎஸ்-ஸை மதிக்கல.. கொந்தளிக்கும் உ.பி.கள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் உலகப் பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் தமிழக அறநிலையத்துறையால் அறங்காவலர்கள் நேற்று பொறுப்பேற்ற நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க திண்டுக்கல்லின் முக்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி, மற்றும் பழனி எம்.எல்.ஏ.வான ஐ.பி.செந்தில் குமார் ஆகியோருக்கு அழைப்பில்லை என திமுகவின் சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.

ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் பக்தர்கள் வரும் நிலையில், தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானை தரிசிக்க வருவது வழக்கம்.

 பழனி கோவில்

பழனி கோவில்

தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், அறங்காவலர்களை தமிழக அரசு நியமிப்பது வழக்கம். இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டப்பிரிவுப்படி கோயில்களுக்கு அறங்காவலர்கள் குழு அரசால் அமைக்கப்பட வேண்டும். 3 பேருக்கு குறையாமல் மற்றும் 5 பேருக்கு மிகாமல் இக்குழு அமைக்கப்பட வேண்டும். அதில் ஒரு உறுப்பினர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவராகவும், ஒரு உறுப்பினர் மகளிராகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறங்காவலர்கள் நியமனம்

அறங்காவலர்கள் நியமனம்

அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், பட்டியல் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அதன்படி, திருப்பூர் கே.எம்.சுப்பிரமணியம், சென்னை சந்திரமோகன், திண்டுக்கல் மணிமாறன், திண்டுக்கல் ராஜசேகரன், ஒட்டன்சத்திரம் சத்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவியேற்பு

பதவியேற்பு

நேற்று இவர்கள் அனைவரும் பழனி கோவிலில் முறைப்படி பதவியேற்றனர். இவர்கள் நேற்று காலை பழனி கோயில் அலுவலக உலக கூட்ட அரங்கில் பதவி ஏற்று கொண்டனர். அதன் பின் மறைமுக தேர்தல் மூலம் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்வின் போது திண்டுக்கல் மண்டல ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சர்ச்சை

சர்ச்சை

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாருக்கு அழைப்பில்லை. மேலும் இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. முக்கிய பிரமுகர்கள் அழைக்கவில்லை யாரையுமே அழைக்காமல் தன்னிச்சையாக பழனி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையர் நடராஜன் செயல்படுவதாக திமுக தொண்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் குற்றம் சாட்சி வருகின்றனர். இதனால் பதவியேற்ற முதல் நாளே சங்கடத்தில் அறங்காவலர்கள் ஆழ்ந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+