பழனி டாக்டர் பார்த்த பலான வேலை.. அதுவும் டியூட்டி டைமில்! ஜெயிலுக்கு போயும் திருந்தலையே! பரபர புகார்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் பெற்ற ஜாமீனில் வெளிவந்த மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தனக்குப் போலீஸார் பாதுகாப்பு வழங்கவும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பழனியைச் சேர்ந்த செவிலியர் கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார். இதற்கிடையே செவிலியர் படிப்பை முடித்திருந்த கண்மணி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
பகல், இரவு என மாறி மாறி அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவராகப் பணியாற்றும் மதனகோபால் இரவு நேரங்களில் பணியில் இருந்த கண்மணிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

செவிலியர் பாலியல் தொந்தரவு
மேலும் இது தொடர்பாக வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் மதனகோபாலின் பாலியல் அத்துமீறல் அதிகரித்ததால் அதிர்ச்சி அடைந்த கண்மணி இது தொடர்பாக தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் அவரைப் பணிக்குச் செல்ல வேண்டாம் என அவரது கணவர் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே மதனகோபால் அந்தச் செவிலியருக்குத் தொடர்ந்து ஆடியோக்கள், குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
செவிலியர் புகார்
இதனால் மனவேதனை அடைந்த கண்மணி பாலியல் தொல்லை தொடர்பாக பழனி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பழனி நகர் காவல் துறையினர் பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவர் மதனகோபால், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அவரது மனைவி அமுதவல்லி, உறவினர்கள் மோகன், சிவஞானம் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பெண்ணை மிரட்டியது, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதனகோபால் கைது செய்யப்பட்டார்.
ஜாமீனில் வந்த மருத்துவர்
இந்த நிலையில் நீதிமன்றத்தை அணுகி மதனகோபால் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் நிபந்தனை ஜாமீன் பெற்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த மதனகோபால் புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என கண்மணி மற்றும் அவரது கணவரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் பழனியை விட்டு வெளியூர் சென்றுவிட வேண்டும் என மிரட்டியதாக கூறப்படும் நிலையில், செவிலியர் மிரட்டல் தொடர்பாக பழனி நகர் காவல் ஆய்வாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீஸ் பாதுகாப்பு கோரிக்கை
நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வந்த அடுத்த நாளே மருத்துவர் தன்னை மிரட்டுவதால் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் தனது குடும்பத்தினர் மனவேதனை அடைந்துள்ளதாக அந்த புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பழனியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications