பேஸ்புக் ஸ்டோரியில் ‘அந்த’ படம்..பழனி திமுக எம்எல்ஏ ஐபிஎஸ் ஷாக்! நள்ளிரவில் வேலையைக் காட்டியது யார்?
திண்டுக்கல்: பழனி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனுமான ஐபி செந்தில் குமாரின் முகநூல் பக்கத்தில் இரவு நேரத்தில் ஆபாச படங்கள் பதிவு செய்யப்பட்ட சம்பவத்தால் அவரது ஃபாலோயர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அப்பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக அவரே விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், மருதராஜ் என மாறி மாறி மாவட்ட செயலாளர்கள் இருந்தாலும். இவர்தான் அதிமுக என்று யாரையும் சொல்ல முடியாது. பொதுவாகவே தமிழகம் முழுவதும் அதிமுகவில் நிலைமை அப்படித்தான் உள்ளது.

ஆனால் திமுகவை பொருத்தவரை தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் என்றால் இவர்கள் தான், ஊரைச் சொன்னாலே பேரைச் சொல்லும் அளவுக்கு பல ஆண்டு காலம் அவர்கள் அந்த மாவட்டங்களில் கோலோச்சி வருகின்றனர். துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஐபி செந்தில்குமார்: அந்த வகையில் தென் மாவட்டங்களில் திமுகவின் முக்கிய முகமாக வலம் வருபவர் ஐ.பெரியசாமி. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த அவர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். ஆத்தூர் தொகுதியில் ஆழமாக வேரூன்றி உள்ள அவர் கடந்த திமுக ஆட்சி காலங்களில் முப்பெரும் துறை அமைச்சராகவும் பதவி வைத்துள்ளார். தற்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாரும் தீவிர அரசியலில் உள்ளார்.
2 முறை எம்.எல்.ஏ: திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும், மாநில இளைஞரணி துணைச் செயலாளராகவும் பதவி வகித்த அவர் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருந்தும் விடாமல் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் பழனி தொகுதியிலேயே போட்டியிட்ட அவர் முதன் முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார், அதன் பிறகு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
மாவட்ட செயலாளர்: அவரது தந்தை மாநில அளவிலான பொறுப்புக்கு சென்றதை எடுத்து திண்டுக்கல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்டம் ஐபி செந்தில்குமார் வசமாகவும் மேற்கு மாவட்டம் மூத்த சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி வசம் சென்றது. பொதுவாக பழனி தொகுதியில் ஒரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அடுத்த முறை வென்றதில்லை என்ற சென்டிமென்டை உடைத்து மூன்றாவது முறையாக பழனியில் போட்டியிட்ட அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
பேஸ்புக் பேஜ்: தற்போது வரை மிகவும் தீவிர அரசியலில் இருக்கும் அவர், நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் பிசியாக களப்பணியாற்றினார். சேஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், தன் கட்சி மற்றும் தொகுதி சார்ந்த நிகழ்வுகளை பேஸ்புக் ட்விட்டரில் போடுவது வழக்கம். பேஸ்புக்கில் 'செந்தில் பெரியசாமி' என்ற தனிப்பட்ட ஐடியும், I.P.Senthilkumar MABL MLA என்ற பேஜும் உள்ளது. இதில் தான் அவர் தான் சார்ந்த நிகழ்வுகளை பதிவிட்டு வந்தார்.

கடும் அதிர்ச்சி: இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பெருவெற்றி பெற்றார். இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ. ஐபிஎஸ் ஆகியோர் சென்றனர். தொடர்ந்து அவர்கள் வெற்றிக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டனர். இதற்கிடையே சுமார் 10.30 மணியளவில் ஐபி செந்தில்குமாரின் பேஸ்புக் பேஜை பார்த்த அவரது ஃபாலோயர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆபாச படங்கள்: அவரது " I.P.Senthilkumar MABL MLA" என்கின்ற முகநூல் பேஜின் ஸ்டோரியில் திடீரென ஆபாச படங்கள் பதிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவர் தரப்புக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து சிறிது நேரத்தில் ஐபி செந்தில்குமார் தனது , 'செந்தில் பெரியசாமி" என்ற முகநூல் பக்கத்தில் சில விஷமிகள் ஹேக் செய்து மிகவும் தவறான ஆபாச படங்களை பதிவிட்டு என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆகவே கழகத் தோழர்கள் நண்பர்கள் அந்த பதிவில் புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.
திடீர் நீக்கம்: இதற்கிடையே சில நிமிடங்களில் அவரது பக்கத்தில் இருந்து ஆபாச படங்கள் அகற்றப்பட்டது. பழனி திமுக எம்எல்ஏவின் முகநூல் பக்கத்தில் திடீரென ஆபாச படங்கள் பதிவு செய்யப்பட்டு சிறிது நேரத்தில் அழிக்கப்பட்டதும், அதற்கு தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ள சம்பவம் தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஐபி செந்தில்குமாரின் மனைவியான மெர்சி செந்தில்குமாரின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, குடும்ப விஷயங்கள் பகிரப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications