நண்பனின் மனைவியுடன் ரகசிய உறவு.. குப்பையில் நவநீதன் கிடந்த கோலம்! அஜித்தை அள்ளிய போலீஸ்.. பரபர பழனி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்தவரை மது குடிக்கலாம் என அழைத்துச் சென்று தீர்த்துக் கட்டிய கணவனின் பகீர் பின்னணி தற்போது வெளியாகி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரியப்பா நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. பழனி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தரம் பிரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. இந்த நிலையில் புதன்கிழமை காலையில் அப்பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் பழனி நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு சென்ற பழனி போலீசார் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்திற்கு அருகே மது பாட்டில்கள் கிடந்ததால் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறு அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. தொடர்ந்து கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் பழனியைச் சேர்ந்த நவநீதன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பழனி ஜவகர் நகரை சேர்ந்த அஜித் என்பவர் உடன் சென்றது தெரிய வந்தது.
அஜித்தை பிடித்து விசாரித்த போது தான் அந்த கொலையை செய்தேன் என கூறி அதிர வைத்தார். அஜித் அவரது மனைவியுடன் குபேரப்பட்டினம் பகுதியில் வசித்து வந்த நிலையில் நவநீதனுக்கும் அஜித்தின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இருவரும் முறையற்ற உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித் நவநீதனை கண்டித்து இருக்கிறார்.
ஆனாலும் அவரது மனைவியுடன் அவர் பழகியதை நிறுத்தவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு நவநீதனை மது குடிக்க அழைத்துச் சென்ற அஜித் அவரது நண்பருடன் சேர்ந்து தான் வைத்திருந்த கத்தியால் நவநீதின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் தப்பி உள்ளனர். கொலை தொடர்பாக அஜித் மற்றும் அவரது நண்பரான சுதாகர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications