56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்!
சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமத்திற்கு தொடர்பான நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 95 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழனி: சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமத்திற்கு தொடர்பான நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 95 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழனியில் உள்ள சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம் உலகப் புகழ்பெற்றது. சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமங்கள்தான் பழனி பஞ்சாமிர்தம் உலகம் முழுக்க பிரபலம் அடைய முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் இவர்கள் விபூதி, பிரசாதம் உள்ளிட்ட பூஜை சாமான்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களின் குழுமத்தில் கடந்த வாரம் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது.

சித்தனாதன் எப்படி
சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம் சிவநேசன், அசோக்,ரவி, செந்தில் ஆகிய நான்கு சகோதரர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 200 பேர் கொண்ட பெரிய கூட்டு குடும்பம் இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. திமுக தலைவர்கள் சிலரின் வீட்டில் பெண் கொடுத்தும், பெண் எடுத்தும் திருமண பந்தங்களை கூட இவர்கள் செய்துள்ளனர்.

வருமான வரித்துறை
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் வரிமான வரித்துறையினர் கடை உரிமையாளர்களின் வீடுகள், குடோன்கள், அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். மொத்தம் 250 அதிகாரிகள் இப்படி அதிரடி சோதனையில் இறங்கினார்கள். முதல் நாள் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.

டைரி
இந்த நிலையில் நேற்று முதல் நாள் நடந்த சோதனையில் அதிரடி திருப்பமாக 56 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கட்டுக்கட்டாக பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கு 5 நாட்களாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

ஆச்சர்யம்
இந்த நிலையில்தான் அவர்களின் வீட்டில் இருந்து முக்கியமான டைரி ஒன்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டைரி மூலம் சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமத்திற்கு தொடர்பான நிறுவனங்களின் கணக்கில் வராத 95 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டைரியில் பணம் பதுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications