பழனி கோவிலில் நடந்த அதிசயம்.. அள்ளக் அள்ளக் கொட்டிய தங்கம்! பெருமாளுக்கே டஃப் கொடுத்த முருகன்!
திண்டுக்கல்: உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் மற்றும் திருஆவினன்குடி உள்ளிட்ட உபகோயில்களில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், மொத்தம் 7 கோடியே 19 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது. மேலும், 1035 கிராம் தங்கம் மற்றும் 16,793 கிராம் (சுமார் 16.7 கிலோ) வெள்ளிப் பொருட்கள் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையான கோயில் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தான். இந்த கோயிலுக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் இருந்து ஏரளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.

பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
பழனி முருகன் கோவில்
அந்த காலக்கட்டத்தில நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் அலைமோதும். அதேநேரம் மற்ற நேரங்களில் விஷேச நாட்களில் மற்றும் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில், ஞாயிறுகளில் பழனி முருகன் கோயிலுக்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தொடர் விடுமுறை காரணமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.
உண்டியல் காணிக்கை,
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழனி முருகப் பெருமானை தரிசித்தனர். அவ்வாறு மலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி, சேவல், தானியங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ஒருமுறை அல்லது உண்டியல் நிரம்பியவுடன் அவற்றை திறந்து எண்ணுவது வழக்கம்.
பக்தர்கள் கூட்டம்
இந்நிலையில் சபரிமலை சீச்ன் காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் உண்டியல்கள் நிரம்பியது. இதை அடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் பணம், நாணயம் ஆகியவற்றை என்னும் பணியில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஈடுபட்டனர். அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்றுடன் நிறைவடைந்தது.
உண்டியல் வசூல்
இதில் மலைக்கோயில் உண்டியல்கள் மூலம் இரண்டு நாட்களில் மட்டும் 6 கோடியே 97 லட்சத்து 08 ஆயிரத்து 187 ரூபாய் ரொக்கம் வசூலாகியுள்ளது. பக்தர்களின் நேர்த்திக்கடனாகச் செலுத்தப்பட்ட 1035 கிராம் தங்கம் மற்றும் 16,793 கிராம் (சுமார் 16.7 கிலோ) வெள்ளிப் பொருட்கள் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டுப் பக்தர்கள் வழங்கிய 2,240 கரன்சி நோட்டுகளும் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளன.
பழனி உபகோயில்களின் உண்டியல்
இதேபோல் பழனி திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில் மற்றும் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளிட்ட உபகோயில்களின் உண்டியல் காணிக்கையாக 22 லட்சத்து 14 ஆயிரத்து 119 ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து, பழனி கோயில் நிர்வாகத்திற்கு இந்த முறை மொத்தமாக 7 கோடியே 19 லட்சத்து 22 ஆயிரத்து 306 ரூபாய் ரொக்கம் காணிக்கை வருவாயாகக் கிடைத்துள்ளது. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள் உள்ளிட்ட பொருட்களும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications