கொடைக்கானல் போறீங்களா.. தலைகீழாக மாறிய கொடை ரோடு ரயில் நிலையம்.. இது எவ்வளவு முக்கியம் தெரியுமா?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு என அழைக்கப்படும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் சுற்றுலா பயணிகளுக்காகவே உருவாக்கப்பட்ட இந்தியாவில் பாரம்பரிய "ஏ" கிரேட் ரயில் நிலையங்களில் ஒன்றாகும். கொரோனா காலத்திற்கு பின் அந்த ரயில் நிலையமும், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமும் அடியோடு முடங்கி உள்ளது.
கொடைக்கானல், மூணாறு, இடுக்கி, தேக்கடி, கம்பம் மற்றும் தேனி திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு வெளிநாடுகள், வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் எளிதில் வந்து செல்ல வசதியாக உள்ள கொடைரோடு இரயில் நிலையத்தில் கொரோனா காலத்திற்கு முன்புவரை விரைவு, அதிவிரைவு, சிறப்பு ரயில்கள் உட்பட 23 ரயில்கள் நிறுத்தப்பட்டன.

கொரோனா தடைகாலம் முடிந்து இயல்பு நிலை திரும்பி, தற்போதுவரை வெறும் மூன்று ரயில்கள் மட்டுமே நிறுத்தபடுவதால் இந்த ரயில்நிலையத்தில் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் இந்த ரயில் நிலையத்தை நம்பி இருந்த 100க்கணக்கான டாக்ஸி ஓட்டுநர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ மாணவியர் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுபற்றி அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சுந்தர்ராஜன் கூறுகையில், ஆங்கிலேயர் காலத்தில், கொடைக்கானல், தேனி மற்றும் கேரளாவின் மலைப் பகுதிகளுக்கு செல்லவும், வடமாநிலங்களுக்கு செல்லவும் ஆங்கிலேயர்கள் மற்றும் பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் கொடைரோடு முக்கியமான ரயில் நிலையமாக இருந்தது. 4 நடைமேடைகளுடன், ஏ கிரேட் ரயில் நிலையமாக பல்வேறு வசதிகளுடன் இருந்த இந்த கொடைரோடு ரயில் நிலையத்தில், கொரோனா காலத்திற்கு முன்பு தேஜஸ், குருவாயூர், நெல்லை, முத்துநகர், பொதிகை, ஹவுரா, கொல்லம், பாண்டியன் மற்றும் சிறப்பு ரயில்கள் என 16 முதல் 22 ரயில்கள் வரை நிறுத்தப்பட்டன. இப்போது பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தான் நிற்கிறது.

தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் ஏலக்காய், காபி, உள்பட பல்வேறு பொருட்கள் கொடைரோடு ரயில் நிலையம் மூலமாகவே வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. வடமாநில வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் வந்ததால் எப்போதும் பிஸியாக இருந்த இந்த ரயில் நிலையத்தில் கொரோனாவிற்கு பின் பெரும்பாலான ரயில்கள் நிற்கவில்லை. திண்டுக்கல்லில் மட்டுமே எல்லா ரயில்களும் நிற்கின்றன. வெறும் 3 ரயில்கள் தான் நின்று செல்கின்றன என்று வேதனையுடன் தெரிவித்தார்.
கொடைக்கானல் சீசன் தொடங்கிவிட்ட நிலையில், ஏராளமான மக்கள் கார்களிலும்,ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் செல்கிறார்கள். கொடை ரோட்டில் ரயில்கள் நிற்பது இல்லை என்பதால், கொடைக்கானலுக்கு வர விரும்புவோர் ரயிலில வந்தால் திண்டுக்கல் நகரிலேயே இறங்கி அங்கிருந்து டாக்ஸிகள் மூலம் கொடைக்கானல் செல்கிறார்கள்.
இதேபோல் தேனி, கம்பம், போடி, தேக்கடி, மூணாறுக்கு சுற்றுலா செல்பவர்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்திலேயே இறங்கி செல்கிறார்கள். இதன் காரணமாக கொடை ரோடு ரயில் நிலையம் சுத்தமாக வெறிச்சோடி காணப்படுகிறது. இப்படியே சென்றால் கொடை ரோடு ரயில் நிலையத்தை மூடும் நிலை ஏற்படும் என்றும் மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

பழையபடி அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுத்தால் கொடைரோட்டை சுற்றியுள்ள பகுதிகள் மேம்படும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொடை ரோடு அருகே நிலக்கோட்டை , வத்தலக்குண்டு, வாடிப்பட்டி என பகுதிகள் உள்ளன. சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் கொடைரோடு ரயில் நிலையத்தை நம்பி இருந்தன.
இப்போது இந்த மக்கள் மதுரைக்கோ அல்லது திண்டுக்கல் நகருக்கோ செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். கொடை ரோடு ரயில் நிலையத்தை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற அந்த பகுதி மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications