Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமக ராமலிங்கம் கொலை.. 5 ஆண்டுக்கு பின் திண்டுக்கல்லில் என்ஐஏவிடம் சிக்கிய முக்கிய நபர்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த 2019ல் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குற்றவாளிகளுக்கு தங்க இடம் கொடுத்ததாக கூறி திண்டுக்கல் பூம்பாறையை சேர்ந்த ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமகவில் செயல்பட்டு வந்தார். பாமகவின் முன்னாள் நகர செயலாளராக பொறுப்பு வகித்து இருந்தார். ஒருபுறம் பாத்திரக்கடை தொழில் செய்த ராமலிங்கம் அரசியலிலும்கவனம் செலுத்தி வந்தார்.

ramalingam murder case nia dindigul

இதற்கிடையே தான் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மதமாற்றம் செய்வதை ராமலிங்கம் கண்டித்ததும், அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தான் அவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்ட எழுந்தது தான்.

இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 10 பேர் கைதான நிலையில் 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (39), கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத்(42), வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன்(33), திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத்(32), திருமங்கலக்குடியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன்(33) ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவர்கள் 5 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் 5 பேருக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் தான் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக என்ஐஏ அதிகாரிகள் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அவரது பெயர் முகமது அலி ஜின்னா. இவர் திண்டுக்கல் பூம்பாறையை சேர்ந்தவர். இவரை தேடப்படும் குற்றவாளியாக என்ஏஐ அறிவித்த நிலையில் தற்போது திண்டுக்கல் பூம்பாறையில் பதுங்கி இருந்த அவரை என்ஐஏ அதிகாரிகள் தட்டித்தூக்கி உள்ளனர். ம ராமலிங்கம் கொலை நடந்து தற்போது 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் முகமது அலி ஜின்னா தற்போது என்ஐஏ அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார். தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் இன்னும் 4 பேர் தலைமறைவாக உள்ளனர். கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத்(42), வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன்(33), திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத்(32), திருமங்கலக்குடியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன்(33) ஆகியோர் இன்னும் என்ஐஏ அதிகாரியிடம் சிக்கவில்லை. இவர்கள் பற்றிய விபரங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் பொதுமக்கள் நேரடியாக தெரிவிக்கலாம்.

அப்படி தெரிவிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த தகவலை 'தேசிய புலனாய்வு முகமை, எண் 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு தெரிவிக்கலாம். இல்லாவிட்டால் 94999 45100, 99623 61122, 044 2661 5100 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இல்லாவிட்டால் [email protected] என்ற மெயில் ஐடி மூலம் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+