ஆர்டர் கொடுத்தது ஓகே..’கலைஞர்’ வீட்டுக்கு 20 ஆயிரம் லஞ்சம்! அமைச்சரிடமே புலம்பும் உபிகள்..பாமக பகீர்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளுக்கு கட்டுமான பணி ஆணைகளை வழங்கப்பட்டுள்ள நிலையில், கலைஞர் தொகுப்பு வீடு திட்டத்தில் வீடு வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக திமுகவினரே அமைச்சர் ஐ . பெரியசாமியிடம் குற்றச்சாட்டு வைக்கும் அவல நிலை நிலவுகிறது என பாமக மாநில பொருளாளர் திலகபாமா புகார் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளுக்கு கட்டுமான பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பின்னர் கலைஞரின் கனவு இல்லம் கட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பணி ஆணையினை வழங்கினார்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு 1256 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல வீடு திட்டம் கட்ட ஆணை வழங்கி உள்ளதாகவும், அதேபோல் ஆத்தூர் தொகுதி முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில் கலைஞர் தொகுப்பு வீடு திட்டத்தில் வீடு வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக திமுகவினரே திமுக அமைச்சர் ஐ . பெரியசாமியிடம் குற்றச்சாட்டு வைக்கும் அவல நிலை நிலவுகிறது என பாமக மாநில பொருளாளர் திலகபாமா புகார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ஆல்வின் அமல பிரசன்னா என்பவரை பாமக மாநில பொருளாளர் திலகபாமா அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் , திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஜாக்பாட் என்ற பெயரில் நடைபெற்று வரும் ஆன்லைன் லாட்டரிகளை தடை செய்ய வேண்டும் , திண்டுக்கல்லில் அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளில் திண்டுக்கல் மருத்துவமனை யில் அனுமதித்த பிறகு அவர்களை அப்படியே மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர் , எனவே திண்டுக்கல்லிலேயே மேல் சிகிச்சை செய்யும் அளவிற்கு சிறந்த மருத்துவ குணம் கொண்ட மருத்துவ குழுவினரை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசிய திலகபாமா,” திண்டுக்கல்லில் அதிக அளவு லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்து வருகின்றது இதனை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சியில் சுமார் நாலரை கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறுகின்றனர் , கையாடல் செய்யப்பட்ட மக்களின் வரிப்பணம் மீண்டும் அரசுக்கு வந்து சேர திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
அதேபோல ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தொகுதியான ஆத்தூர் பகுதியில் கலைஞர் தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக திமுக நிர்வாகி திமுக அமைச்சரிடமே புகார் அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் பெற்றவர்கள் யார் என விசாரணை நடத்தி, யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications