மை டியர் மச்சான் நீ மனசு வச்சா..இன்ஸ்டா ரீலில் லைக்ஸ் வலை..சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..ஷாக்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்ஸ்டாகிராமில் பழகியவரோடு ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவரை கைவிட்டு குழந்தைகளுடன் சென்ற பெண் மீட்கப்பட்ட நிலையில், லைக்ஸ் வலை விரித்து பெண்ணை கடத்திச் சென்று சித்ரவதை செய்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மனிதர்களின் இதயத் துடிப்பாகவே மாறி போன செல்போனால் அதிர்ச்சிகரமான கள்ளக்காதல் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருவது சமீப காலங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

டிக் டாக் மியூசிக்கலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப், பேஸ்புக் என பல்வேறு செயலிகளில் பெண்கள் அடையாளம் தெரியாத ஆண்களுடன் டப்மாஸ் செய்து உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்ஸ்டா ரீல்

இன்ஸ்டா ரீல்

இதேபோல் தான் லைக்ஸ்காக உலாவும் பெண்களை குறி வைத்து அவர்களை கடத்திச் சென்று பணம் மற்றும் வாழ்க்கையை பறிக்கும் நபர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சைபுதின் என்ற நபர்தான் குற்றசாட்டில் சிக்கியுள்ளவர். பெண்கள் லைக் வருவதற்காக நடனமாடும் வீடியோக்களுக்கு டூயட் பாடி, லைக்ஸ் , கமெண்ட்ஸ் என செய்து அவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்திருக்கிறார்.

கள்ளக்காதல் விபரீதம்

கள்ளக்காதல் விபரீதம்

இதுவரை மூன்று பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டும் அவர்களை தனிமையாக இருப்பதற்காக 2நாள்கள் அழைத்துச் சென்று மீண்டும் அவர்களை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு விடுவதை வழக்கமாக செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் சைபுதீனுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு வருடத்திற்கு மேலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது . அவரது கணவர் தனியார் நூற்பாலையில் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வருகிறார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளது இன்ஸ்டாகிராமில் சைபுதீன் அப்பெண்ணை கவரும் விதமாக பதிவு செய்ய .. பேசி பழக.. அது கள்ளக்காதலாக மாறியது.

குழந்தைகளுடன் கடத்தல்

குழந்தைகளுடன் கடத்தல்

மூன்று நாட்கள் வெளியே சென்று உல்லாசமாக இருந்து வருவோம் என்று கூறி அப்பெண்ணை அழைத்ததற்கு அவருக்கு இரண்டு குழந்தை உள்ளது என்ற விஷயத்தை கூறியுள்ளார். அப்போது தான் நாம் கணவன் மனைவி என்று நினைத்துக் கொண்டு யாருக்கும் சந்தேகம் வராது என்று குழந்தையுடன் அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து 2 குழந்தைகளுடன் இளம்பெண், கடந்த 2 மாதத்திற்கு முன் புனே சென்றுள்ளார்.அங்கு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தி உள்ளார்.

குழந்தைகளுக்கு கொடுமை

குழந்தைகளுக்கு கொடுமை

இதற்கிடையில் குழந்தைகளுடன் மாயமான மனைவியை அவரது கணவர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்நிலையில், புனே வாலிபர் இளம்பெண்ணின் குழந்தைகளை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். இதையடுத்து, குழந்தைகள் மற்றொரு நபரிடம் செல்போனை வாங்கி தங்களது தந்தையை தொடர்பு கொண்டு அழுதுள்ளனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசில், இளம்பெண்ணின் கணவர் புகார் அளித்தார். இதையடுத்து புனே சென்ற வேடசந்தூர் போலீசார், அந்த ஊர் போலீசார் உதவியுடன் இளம்பெண், குழந்தைகள் இருக்கும் இடத்தை அறிந்து, அங்கு சென்றனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

போலீசாரை பார்த்ததும் சைபுதீன் தப்பியோடிவிட்டார். அப்போது இளம்பெண், 'குழந்தைகளை வேண்டுமானால் அழைத்து செல்லுங்கள். நான் ஊருக்கு வரமாட்டேன்' என தெரிவித்துள்ளார். போலீசார் அறிவுரை கூறி இளம்பெண்ணையும் குழந்தைகளையும் வேடசந்தூர் அழைத்து வந்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த இளைஞரை தேசி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+