அப்ப சாமி தரிசனத்துக்கு போகல.. சபல பேர்வழிகளை குறிவைத்து ஸ்கெட்ச்! பழனியில் சிக்கிய பலான கும்பல்..!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாமி தரிசனம் செய்ய வரும் நபர்களை ஆசை காட்டி தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பணம், செல்போனை ஆண் நண்பர்கள் மூலம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து வந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தமிழக மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

Police arrested fraud gang in Palani

குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் பக்தர்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் பழனியில் திரள்வதால் அங்கு வணிகமும் பெருகி வருகிறது. ஆனால் பழனியில் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

பழனியில் மோசடி: தரிசன மோசடி, அறை எடுத்து தருவதாக மோசடி, பிக்பாக்கெட் தொல்லை, திருநங்கைகள் தொல்லை பாலியல் தொழில் என பழனி பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. அந்த வகையில் தான் தற்போது ஒரு மோசடி கும்பல் சிக்கி இருக்கிறது. சாமி தரிசனம் செய்ய வரும் நபர்களை ஆசை காட்டி தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பணம், செல்போனை ஆண் நண்பர்கள் மூலம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து வந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாலியல் தொழில்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் பழனிக்கு வந்த இரண்டு பெண்கள் தன்னை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் தனியார் விடுதிக்குச் சென்ற தன்னை அறையில் மறைந்திருந்த ஆண் நண்பர்கள் புகைப்படம் வீடியோ எடுத்ததாகவும் பின்னர் தன்னிடம் இருந்த செல்போன் பணம் உள்ளிட்டவையை கத்தியை காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

போலீசார் விசாரணை: அதன் அடிப்படையில் பழனி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை சண்முக நதி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு கார்களில் வந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த குணசேகரன், நத்தத்தைச் சேர்ந்த பாலமுருகன், திண்டுக்கல்லை சேர்ந்த லோகநாதன், சின்னாளபட்டியை சேர்ந்த பவித்ரா 24 , சீலப்பாடியை சேர்ந்த காமாட்சி என்பது தெரிய வந்தது..

Police arrested fraud gang in Palani

மோசடி கும்பல்: அவர்களை விசாரித்ததில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் விடுதியில் ரமேஷ் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் எக்ஸ்யூவி கார் கொடைக்கானலில் இருந்து நிசான் காரை திருடி வந்ததும் தெரியவந்தது . இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கார், அரிவாள், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

5 பேர் கைது: இதேபோல் கொடைக்கானலிலும் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பழனியில் ஆண்களை உல்லாசத்திற்கு அழைத்து, அதை மறைந்திருந்து வீடியோ பதிவு செய்து கொண்டு கத்தியை காட்டி ஆண் நண்பர்கள் மூலம் பணம் ,செல்போன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டும் இதை வெளியே சொன்னால் ஆபாச வீடியோக்களை வெளி விடுவோம் என மிரட்டி வந்திருக்கின்றனர் இந்த மோசடி கும்பல். தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலும் பலர் இதேபோல் பழனியில் உலாவி வருவதாக புகார் கூறுகின்றனர் பழனி வாசிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+