தேர்தல் பணியில் இருந்த காவல்துறை டி.எஸ்.பிக்கு நேர்ந்த சோகம்.. திடீர் இதய செயலிழப்பால் பலி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நேற்று தேர்தல் பணியில் இருந்த காவல்துறை டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் (58) இதய செயலிழப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியில் இருந்தவர்.
சட்டசபை தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான போலீசாருக்கு வேறு மாவட்டங்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டது. அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியில் இருந்த ராமகிருஷ்ணனுக்கு திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் தொகுதி கண்காணிப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டார். ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம், இடைகோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணனுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் உயிரிழந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 89.25 சதவீத வாக்குகள் பதிவானது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில், பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 115 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications