Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் போலீசிடம் தலை தெறிக்க ஓடிவந்த சீனிவாசன்.. வாடகை வீட்டில் அப்படியே.. அதிர வைத்த பெண்கள்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பொன்னி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மூன்று பெண்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

திண்டுக்கல் அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் சீனிவாசன் (வயது 35) ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பொன்னி நகர் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு , சீனிவாசன் பயணிகளை ஆட்டோவில் ஏற்றி சென்றார்.

Rent House Prostitution in Dindigul: Women and brokers arrested by Dindigul police

பின்னர் அவர்களை இறக்கி விட்டு அந்த வழியாக ஆட்டோவில் வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 6 பேர் சீனிவாசனிடம் பேச்சு கொடுத்தார்கள்.

அப்போது தங்களிடம் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண்கள் இருப்பதாகவும், ரூ.1500 கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று விபசாரத்திற்கு வருமாறு அழைத்துள்ளார

இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வந்து விட்டார். பின்னர் அவர், இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனிடம் நடந்த சம்பவம் பற்றி புகாராக அளித்தார்.

இதனையடுத்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுவின் தனிப்படை போலீசார் செட்டிநாயக்கன்பட்டி பொன்னி நகர் பகுதிக்கு சென்றார்கள். அப்போது அங்கு ஆண்களை விபசாரத்துக்கு அழைத்து கொண்டிருந்த 3 பெண்கள் மற்றும் புரோக்கர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தார்கள்.

அவர்கள் திண்டுக்கல் ராஜக்காபட்டியை சேர்ந்த சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம் வண்டல் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சாணார்பட்டியை சேர்ந்த சுரேஷ், திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த மரிய ஸ்டாலின் பாண்டி என்பது விசாரணையில் தெரியவந்தது.

Rent House Prostitution in Dindigul: Women and brokers arrested by Dindigul police

இவர்கள் வாடகைக்கு வீடுகளை எடுத்து பெண்களை வைத்து விபசாரம் செய்யும் புரோக்கர்களாக செயல்பட்டு வந்தவரகள் என்பதை அறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.

இதனிடையே விபசாரத்தில் ஈடுபட்டதாக பிடிபட்ட 3 பெண்கள் தாடிக்கொம்பு, மானாமதுரை, கோவை சோமனூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார் , திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (30), அருண் (36) ஆகியோரை திங்கள்கிழமை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதேபோல் வீடுகளை வாடகைக்கு எடுத்து இதுபோன்று மேலும் சிலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+