Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு எண்டே கிடையாது சாரே..அலிகார் எல்லாம் ஓரம் போ! புத்துயிர் பெரும் திண்டுக்கல் பூட்டு! மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஒரு காலத்தில் உலகம் முழுவதும் கொடி கட்டி பறந்த திண்டுக்கல் பூட்டு தொழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சரிவை நோக்கி பயணித்தது. இந்த நிலையில் தற்போது திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதை அடுத்து உலகம் முழுவதிலும் இருந்து திண்டுக்கல் பூட்டுக்கு ஆர்டர்கள் குவிவதாக சொல்கின்றனர் வியாபாரிகள். அதே நேரத்தில் ஆட்கள் தேவை அதிகம் இருப்பதால் இளைஞர்கள் பூட்டுத் தொழில் ஈடுபட முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பழனி போன்ற ஆன்மீக ஸ்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் பிரபலமாக இருந்தாலும் தொழில் ரீதியாக பார்க்கும் பொழுது திண்டுக்கல் என்றாலே அனைவருக்கும் சட்டென்று ஞாபகத்திற்கு வருவது பூட்டுத் தொழில் தான்.

Revival of the famous Dindigul lock industry

திருப்பதி தேவஸ்தானத்தில் இருக்கும் ஆள் உயர பூட்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டது என்பது திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயமாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் பூட்டு: அதேபோல் பல்வேறு பிரபலமான கோவில்களுக்கும் பிரம்மாண்டமான அளவில் மிகப்பெரிய பூட்டுக்களை செய்து கொடுத்த பெருமையும் திண்டுக்கல்லை சேரும் என்பதும் உண்மைதான். 1975 - 80 களில் திண்டுக்கல்லை சுற்றியுள்ள 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட பூட்டு தொழிலாளர்கள் திண்டுக்கல்லில் பூட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இருந்த போதும் தற்போது திண்டுக்கல் பூட்டிற்கு மவுசு குறைந்து விட்டதாக ஏராளமானோர் கூறிவிடுகின்றனர்.

பூட்டு தொழில்: இதுகுறித்து சுமார் 45 வருடங்களாக பூட்டுத்தொழில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிடம் கேட்டபோது , சுமார் 600 தொழிலாளர்கள் தயாரிக்கும் பூட்டுக்களை விற்பனை செய்வதற்கெனவே இடைத்தரகர்கள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். பூட்டுத் தொழிலாளர்கள் தயாரிக்கும் பூட்டுக்களை தொழிலாளர்கள் நேரடியாக விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் மூலமாக மட்டுமே விற்பனை செய்யக்கூடிய நிலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே பூட்டுத் தொழிலாளர்கள் தயாரிக்கும் பூட்டிற்கு வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலையே இறுதியானது, வியாபாரிகள் எவ்வளவு லாபம் வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர் என்று எந்த தொழிலாளருக்கும் தெரியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பூட்டு தயாரிப்பு: இதனால் அன்றைய சூழ்நிலைக்கு கல்வியறிவு போதாத நிலையில் அன்றாட தேவைக்கு பணம் கிடைத்தால் போதும் என்ற சூழ்நிலையில் தொழில் செய்து வந்த பூட்டு தொழிலாளர்களுக்கு , பூட்டுத் தொழிலை எப்படி விரிவடையச் செய்வது , அரசு மானியங்களை எப்படி பெறுவது, வங்கிக் கடன் எப்படி பெறுவது என்பது குறித்த விபரம் தெரியாமலேயே பூட்டு தயாரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Revival of the famous Dindigul lock industry

பல ரகங்கள்: கடந்த 150 வருடங்களுக்கு மேலாக குடிசை தொழிலாக நடைபெற்று வரும் இந்தப் பூட்டு கடைகளில், மாங்காய் பூட்டு, மணிபூட்டு, தொட்டி பூட்டு, லண்டன் லாக், டிலோ லாக், இருக்கும் இடத்தில் சாவி போட்டு 10 அடி தூரம் வரை திறக்கும் ரகசிய பூட்டுக்கள், ஆறு சாவி பூட்டுக்கள், எட்டு சாவி பூட்டுக்கள், உள்ளிட்ட பல்வேறு வகையான பூட்டுகள் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு வியாபாரிகள் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது.

அன்றாடம் வேலை: இந்த பூட்டு வீடு மற்றும் கடைகளுக்கு பயன்படுத்தும் வகையில் உள்ள பூட்டுகள் சுமார் 200 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலும் பிரபலமான கோவில்களுக்கு பயன்படுத்தும் பூட்டுகள் சுமார் 5000 முதல் 35000 வரையிலும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் விலையை கணக்கில் எண்ணாமல் இயந்திரம் இன்றி கைத்திறனால் தயாரிக்கப்படும் திண்டுக்கல் பூட்டின் தரத்திற்க்காக மட்டுமே பல்வேறு மாநிலத்தவர்களும் திண்டுக்கல் பூட்டை நாடி வந்து கொண்டு தான் இருந்தனர். பூட்டுத் தொழிலாளர்களுக்கும் அன்றாட வேலை இருந்து கொண்டே இருந்தது.

அலிகார் பூட்டு: இந்நிலையில் நாளடைவில் இயந்திரத்தால் தயாரிக்கப்படும் அலிகார் என்று அழைக்கப்படும் பிரபலமான பூட்டு உலகெங்கும் பரவத் தொடங்கியது, அலிகார் பூட்டு என்பது பார்ப்பதற்கு சிறிய அளவிலும் அழகான தோற்றங்களுடன் மலிவான விலை கொண்ட பூட்டாகவும் இருந்ததால் பொதுமக்களின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்தது.

தேவை அதிகம்: எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பவே வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள் என்பது இயல்பு. அந்த வகையில் அலிகார் பூட்டின் தேவை பொதுமக்களிடம் அதிகமாக காணப்பட்டதை அறிந்த வியாபாரிகள் அலிகார் பூட்டினை அதிக அளவில் வாங்கி வியாபாரம் செய்ய ஆரம்பித்தாக கூறப்படுகிறது. இதனால் திண்டுக்கல் பூட்டு செய்யும் தொழிலாளர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர்களின் எண்ணிக்கை குறைந்து வருமானம் பாதிக்க தொடங்கியது.

Revival of the famous Dindigul lock industry

ஆர்வம் குறைவு: இதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லை சுற்றி பல்வேறு இடங்களில் பூட்டு செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் தொழில் செய்யும் ஆர்வம் குறைந்தது. இவர்களுக்கு அடுத்து இவர்களது வாரிசுகளுக்கும் தொழிலை கற்றுக் கொள்வதில் விருப்பம் இல்லாமல் போய்விட்டது. 600-க்கும் மேற்பட்ட பூட்டுத் தொழிலாளர்கள் இருந்த திண்டுக்கல்லில் தற்போது ஒரு சிலர் மட்டுமே இந்த பூட்டுத் தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதில் பாரம்பரிய தொழிலை விட்டுவிடக் கூடாது என்று தொழில் மீது பற்று உள்ளவர்களும், உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய திண்டுக்கல் பூட்டின் மகிமை அறிந்தவர்களின் ஆர்டர்களை பெற்ற ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே தற்போது வரை திண்டுக்கல் பூட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார் .

மவுசு குறையவில்லை: தற்போது பூட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் திண்டுக்கல் பூட்டிற்கு மவுசு இன்னும் குறையவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அன்றிலிருந்து இன்றுவரை பூட்டு தொழில் செய்பவர்கள் செய்து கொண்டே தான் இருக்கின்றனர் , ஒரு சிலர் நல்ல வருமானமும் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர் , இருந்த போதிலும் பூட்டு தொழில் மலிவடைந்து விட்டது என பேசுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து திண்டுக்கல் பிரபல பூட்டு வியாபாரிகளிடம் கேட்டபோது , பூட்டுத் தொழிலை செய்பவர்கள் ஒரு பொழுதும் கெட்டுப் போனதாக சரித்திரமே கிடையாது , இருந்தாலும் முறையாக பூட்டு செய்ய தெரியாத ஒரு சில தொழிலாளிகளால் பூட்டு தொழில் மலிவடைந்து விட்டதாக பேசப்பட்டு வருகிறது , இன்று வரை திண்டுக்கல் பூட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

நன்றாகவே இருக்கிறது: பூட்டு தொழில் செய்பவர்களும் இன்னும் திண்டுக்கல்லில் நல்ல முறையில் தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர் , தாங்களாகவே தரமான திண்டுக்கல் பூட்டு தயாரித்து எங்களைப் போன்ற வியாபாரிகளிடம் அவர்கள் கூறிய விலைக்கு விற்பனை செய்து நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். திண்டுக்கல் பூட்டு 40 வருடம் வரை உழைக்கும் பூட்டாக உள்ளதால் இதற்கு இன்று வரை கிராக்கி அதிகமாகத்தான் உள்ளது. எப்பேர்ப்பட்ட புகழ்பெற்ற இயந்திரத்தால் செய்யப்பட்ட பூட்டாக இருந்தாலும் திண்டுக்கல் பூட்டிற்கு ஈடாகாது என்று தெரிந்த வாடிக்கையாளர்கள் இன்று வரை உலகமெங்கும் ஏராளமானோர் திண்டுக்கல்லை நாடி வருவது வழக்கமாகவே உள்ளது .

தொழிலாளர்கள் கருத்து: இந்த நிலையில் திண்டுக்கல் பூட்டிற்கு மவுசு குறைந்துவிட்டது என்று கூறுவதே திண்டுக்கல் பொறுத்தவரை தவறான வார்த்தை தான் என்று கூற வேண்டும், திண்டுக்கல்லில் பூட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு காரணம் ஒவ்வொரு தொழிலாளர்களும் தனது சொந்த இடத்திலேயே பட்டறை வைத்து பூட்டுத்தொழில் செய்வார்கள் , அப்போது பூட்டு செய்து கொண்டிருக்கும்போதே பல்வேறு சொந்த வேலைகளால் பூட்டு முழுமை அடையாமல் பாதியிலேயே வைத்துவிட்டு செல்வதால் தினசரி அதிகளவில் பூட்டு செய்ய தோதுவாக அமையாத சூழ்நிலை இருந்தது. இதனால் வருமானமும் குறைந்தது, எனவே பூட்டுத் தொழிலில் லாபம் பார்க்க முடியவில்லை என்று தொழிலாளர்கள் தாங்களாகவே நினைத்துக் கொண்டனர்.

Revival of the famous Dindigul lock industry

அதிகளவு பூட்டு: ஆனால் பூட்டுத் தொழிலுக்கென இண்டஸ்ட்ரி வைத்து பூட்டு தொழிலாளர்களை வைத்து பூட்டு செய்யும் பொழுது ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பது போல் வேலையில் மட்டுமே முழுமையான கவனம் செலுத்தி வேலை பார்க்க முடியும் , அவ்வாறே இதுவரை வியாபாரிகள் வைத்திருக்கும் பூட்டு பட்டறைகளில் பல்வேறு தொழிலாளர்கள் மவுசு குறையாத திண்டுக்கல் பூட்டை தயாரித்து வருகின்றனர். இப்படி தயாரித்து வரும் தொழிலாளர்களே அதிகளவு பூட்டு செய்ய முடியும்.

புவிசார் குறியீடு: மேலும் திண்டுக்கல்லில் பூட்டு தொழிலாளர் சங்கம் இருந்தும் சரியான முறையில் செயல்படாமல் உள்ளது, இன்னும் சொல்லப்போனால் தொழிலாளர் சங்கம் வியாபாரிகள் சங்கம் என உள்ளதா என்பதே சந்தேகம்தான் என்றும் கூறலாம், மேலும் திண்டுக்கல் பூட்டிற்கு தமிழக அரசு சார்பு புவிசார் குறியீடு வழங்கியதற்குப் பிறகு பூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றும் கூறலாம்.

இளைஞர்கள் முன்வர வேண்டும்: வாடிக்கையாளர்கள் இயந்திரத்தால் செய்யப்படும் பூட்டுக்களை அதிகளவு தேடினாலும் அதற்கு சமமாக திண்டுக்கல் பூட்டையும் தேடி வந்து கொண்டு தான் இருக்கின்றனர். எனவே திண்டுக்கல் பூட்டிற்கு ஒரு காலமும் அழிவே கிடையாது என்பதுதான் ஆணித்தனமான உண்மை என்று கூறினார் . மேலும் இளைஞர்கள் பூட்டு தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக் கொடுக்க இன்னும் திண்டுக்கல்லில் ஏராளமான பூட்டுத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர் இளைஞர்கள் பூட்டு தொழில் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று கூறினார்.

வலுவானதாக இல்லை: மேலும் இதுகுறித்து தனது சொந்த இடத்திலேயே பட்டறை வைத்திருக்கும் தொழிலாளர் ஒருவரிடம் கேட்டபோது, திண்டுக்கல்லில் பூட்டுத்தொழில் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை எங்களை கைவிட்டதாக கூறமுடியாது. ஏனென்றால் திண்டுக்கல்லில் கைகளால் வலுவான முறையில் செய்யக்கூடிய பூட்டிற்கு இன்று வரை வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததே இல்லை.

Revival of the famous Dindigul lock industry

பூட்டு விற்பனை: இன்று வரை நான் ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு பூட்டு வரை தயாரித்து விற்பனை செய்து ஒரு நாளைக்கு 800 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை வருமானம் பார்த்து வருகிறேன். பூட்டு செய்ய தேவையான மூலப்பொருள்களின் விலையைப் பொறுத்தே பூட்டின் விலை நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் அன்றிலிருந்து இன்று வரை மூலப்பொருட்கள் கிடைப்பதில் பெரிய சிரமம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை . எனவே பூட்டுத் தொழிலாளர்கள் முழுமையான ஆர்வத்துடன் பூட்டுக்களை தயாரித்து வந்தாலே போதுமானது, நல்ல வருமானம் பார்க்கலாம் என்று கூறினார்.

எதிர்பார்ப்பு: எனவே எந்த தொழில் செய்தாலும் அதனை முழுமையாக அறிந்து முழு ஆர்வத்துடன் செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எனவே வருகின்ற தலைமுறை இளைஞர்கள் பூட்டுத் தொழிலை முழுமையான ஆர்வம் எடுத்து செய்து திண்டுக்கல் மண்ணின் பெருமையை காப்பாற்ற வேண்டும் என்பதே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+