முருகனின் 3ஆம் படை வீடு! பழனி கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப்கார் இயக்கம்! பக்தர்கள் வரவேற்பு!
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாக கருதப்படும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். விஷேச நாட்கள் என்றால் சொல்லவே தேவையில்லை பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத வகையில் இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் படிகள், மின் இழுவை ரயில், ரோப் கார் என பல வழிகளில் அவரவர் வசதிக்கேற்ப கோவிலுக்கு செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பராமரிப்பு வருடாந்திர பணிகள் காரணமாக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இரண்டு மாத காலம் நடைபெற்ற பராமரிப்பு பணிகளுக்கு பிறகு இன்று மீண்டும் அந்தச் சேவை பக்தர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2 நாட்களாக எடைக்கற்கள் மற்றும் பஞ்சாமிர்த பெட்டிகளை ரோப்காரில் வைத்து மலைக்கு மேலேயும், கீழேயும் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சோதனை ஓட்டம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சென்னை ஐஐடி வல்லுநர் குழுவும் ரோப்காரை இயக்கி ஆய்வு செய்தது. அந்தக் குழு கொடுத்த அனுமதியை தொடர்ந்து இன்று முதல் பக்தர்களுக்காக சேவை தொடங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும்.
ரோப்காரை போலவே மின் இழுவை 3வது ரயிலையும் விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. முதல்நாளான இன்றே ரோப் காரில் பயணித்து கோவிலை அடைவதற்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே ரோப் கார் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
ரோப்கார் சேவை இல்லாத கடந்த 2 மாத காலமும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக வயதான பக்தர்களுக்கு ரோப் கார் சேவை பெரிதும் உதவியாக இருந்து வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications