லஞ்சத்துடன் சிக்கிய ED அதிகாரி! 'மெச்சூரிட்டி' அட்வைஸ் சொன்ன அண்ணாமலை! திண்டுக்கல் பாலபாரதி விளாசல்!
திண்டுக்கல்: அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்று சிக்கிய விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மெச்சூரிட்டியுடன் நடந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பதற்கு திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ.வும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பாலபாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறியதாவது: தமிழ்நாட்டில் தொழில் செய்பவர்களை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கிறார்கள் என்று கூறி சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அமலாக்கத்துறையின் இது போன்ற நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு நடவடிக்கை.

அமலாக்கத்துறைக்கு கண்டனம்: அமலாக்கத்துறை என்பது ஒரு சுயேட்சையாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பாகும். ஓன்றிய அரசின் துறை. அந்த துறை எவ்வாறு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு அங்கித் திவாரியின் கைது உதாரணமாகும்.அவர் இவ்வாறு லஞ்சம் கேட்டு மிரட்டக்கூடிய அளவிற்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நிச்சயமாக தெரியப்படுத்தப்பட வேண்டும். ஒரு டாக்டரிடம் இப்படி லஞ்சம் கேட்டு பெற்ற அமலாக்கத்துறை நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த விசயத்தில் தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை, காவல்த்துறை, துணிச்சலாக ஈடுபட்டுள்ளது என்பது பாராட்டுக்குரியது.
அரசு மருத்துவருக்கு உளைச்சல்: திண்டுக்கல் அரசு மருத்துவத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியவர். அவருக்கு மன உலைச்சலை ஏற்படுத்தும் வகையில் அமலாக்கத்துறை அச்சுறுத்தலை தொடர்ந்து கொடுத்துள்ளது. எனவே அவர் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற முறையிலே அவர் தனது புகாரை தெரிவித்து இருக்கிறார். இதனால் தான் இவ்வளவு பெரிய சம்பவம் பூதாகரமாக வெளிவந்துள்ளது.
சிபிஎம் கண்டனம்: ஆனால் தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இதை அரசியல்படுத்தாதீர்கள், இது எல்லாத்துறையிலும் நடப்பது தானே என்று பேசிக்கொண்டிருக்கிறார். அரசு துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றாலோ அல்லது அரசுத் துறையில் உள்ள மற்றவர்கள் லஞ்சம் பெற்றாலோ, அதை சரி செய்ய வேண்டிய துறை அமலாக்கத்துறை. அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் உள்ள அமலாக்கத்துறையே லஞ்ச ஊழலால் சீரழிந்து கிடக்கிறது என்பதைத்தான் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஆகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வாறு லஞ்சம் கேட்டு மிரட்டுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இது ஒரு சாதாரண விசயம், லஞ்சம் எங்கெல்லாம் இல்லை, இதை பெரிதுபடுத்தக்கூடாது என்று பொதுப்படையாக அண்ணாமலை பேசி வருகிறார். அவரது கருத்து அவருடைய மத்திய பாஜக அரசையும், அந்த அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு மருத்துவரிடம் ரூ.3 கோடி வரை லஞ்சம் கேட்டும் மிரட்டும் சம்பவத்தையும் நியாயப்படுத்தக் கூடிய நடவடிக்கையாகும். அமலாக்கத்துறை பாஜகவின் தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே பார்க்க முடிகிறது.
அண்ணாமலைக்கு கொடுத்த பணம்..: அண்ணாமலையின் நடைபயணத்திற்கு நாங்கள் ஒரு கோடி கொடுத்தோம். 2 கோடி கொடுத்தோம் என்று பலர் பொது வெளியில் பேசி வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த தொழிலதிபர்களிடம் தேர்தலுக்கான நிதியை மிரட்டி வாங்குவதற்குத் தான் இந்த அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய பாஜக அரசு. இந்த பாஜக அரசியலைத்தான் பெரிதுபடுத்தாதீர்கள் என்று அண்ணாமலை சொல்கிறார்.
யாருக்கு மெச்சூரிட்டி இல்லை?: அண்ணாமலையின் அரசியல் மதவெறி அரசியல். ஓட்டுமொத்தமாக பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும் கூட அரசியல் மெச்சூரிட்டி கிடையாது. தன்னுடைய ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்று கையும் களவுமாக பிடிபட்டு உள்ளார். ஒரு அதிகாரி கைதியை போல முகத்தை மூடி கூட்டிச்செல்கிறார்கள். இது மெச்சூரிட்டியான செயல். அதைப்பற்றி தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பேசுவது மெச்சூரிட்டி இல்லை என்று பேசுகிற அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம். அவரது பேச்சு பொறுப்பற்றது. இந்த பிரச்சனையில் இன்னும் அங்கித்திவாரிக்கு மேல் உள்ள மேலதிகாரிகள் யாரெல்லாம் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை வெளிக்கொணர தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
பிரதமர் அலுவலகம்- உள்துறை அமைச்சகம்: பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் லஞ்சம் கேட்டு பேசுவதாகத்தான் அங்கித் திவாரி பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களையும் கூட கொடுத்திருப்பார்கள். எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் அதன் மீதும் விசாரணை செய்ய வேண்டும். இதில் உள்துறை அமைச்சருக்கும் சம்மந்தம் இருக்கிறது. அப்படி அல்லாமல் எப்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் துணை ராணுவப்படை வர முடியும். இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் சம்மந்தம் உள்ளது என்று தெரிகிறது. ஏற்கனவே முடிந்த ஒரு வழக்கை தோண்டித் துருவி எடுத்து அமலாக்கத்துறையினர் லஞ்சம் கேட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனையில் நியாயத்தின் பக்கம் நீதியின் பக்கம் நிற்கிறது. இவ்வாறு திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. கே. பாலபாரதி தெரிவித்தார்.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications