50 லட்சம் கேட்டு காண்டிராக்டர் முருகன் கொலை.. காருக்குள் கதை முடித்த கும்பல்! குழப்பி விட்ட போலீஸ்?
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் முருகன் காரில் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் தகராறு காரணமாக முருகன் கொலை செய்யப்பட்டதாக போலீசார் கூறிய நிலையில், முருகனை கடத்தி 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டது தற்போது தெரிய வந்திருக்கிறது. 15 லட்சம் ரூபாயை கொலையாளிகள் வாங்கியதும், மேலும் 35 லட்சம் ரூபாயை வாங்க வேண்டி இந்த கொலை அரங்கேறி இருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆதாய கொலையை, முன் விரோத கொலை என போலீசார் திசை திருப்பி உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் முருகனின் உறவினர்கள்.
திண்டுக்கல் அடுத்த நல்லாம்பட்டி காவிரி நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 51). தி.மு.க. பிரமுகரான இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை, குளியல் அறை உள்ளிட்டவற்றை ஒப்பந்தம் எடுத்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி முத்துமாரி (42) என்ற மனைவியும், முத்துச்செல்வி (18), பிரதீபா (17), ஸ்ரீதேவி (16) ஆகிய 3 மகள்களும், கேசவன் (13) என்ற மகனும் உள்ளனர். முத்துமாரி திண்டுக்கல் நகராட்சி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

முருகன் நேற்று முன் தினம் தனது காரில் சிறுமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்றார். காரை அவரது டிரைவர் சேக்பரித் (30) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென முருகனை காரில் கடத்திச் சென்றனர். இரவு வரை வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் முருகனுக்கு போன் செய்தபோது இணைப்பு கிடைக்காததால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முருகனை காரில் கடத்திச் சென்ற கும்பல் சாணார்பட்டி நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த முருகனை சரமாரியாக வெட்டியும், குத்தியும் விட்டு அந்த கும்பல் தப்பி ஓடினர். இதனால் அப்பகுதியில் சூழல் சம்பவ பரபரப்பான நிலவியது. இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையிலான போலீசார் வந்தனர். விரைந்து கொலை செய்யப்பட்ட முருகன் உடலை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை அறிந்த முருகனின் மற்றும் உறவினர்கள் குடும்பத்தினர் அவரது உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு வர வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இது குறித்து நத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேட்டுப்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலை அதே பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் (42) என்பவர் நிர்வகித்து வந்துள்ளார். அப்போது அந்த கோவிலை மக்களுக்கக பொதுக்கோவிலாக அறிவிக்க வேண்டும் என முருகன் கூறி வந்துள்ளார். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது எடுக்கப்படாமல் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி எந்தவித முடிவும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் சார்பில் முருகனு முருகனுக்கு வெள்ளிவாள் பரிசளித்து அவருக்கு பிரம்மாண்ட பேனர் வைத்துள்ளனர். அப்போது முதல் முருகன் மீது வீரபத்திரனுக்கு ஆத்திரம் அதிரிகித்துள்ளது. வீரபத்திரன் கோவில் திருவிழாக்களில் கடை பணியில் அமைக்கும் இருந்துள்ளார். அந்த தொழிலுக்கும் முருகன் இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளார்.
இதனால் முருகனை தீர்த்து கட்ட வீரபத்திரன் முடிவு செய்தார். இதற்காக தங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகனின் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்த என்பவரை பயன்படுத்திக் கொண்டார். அவர் முருகனின் நடவடிக்கை களை அவ்வப்போது வீரபத்திரனுக்கு தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் முருகன் தனியாக இருப்பதை வீரபத்திரனுக்கு தெரிவிக்கவே தான் ஏற்கனவே தயார் செய்து வைத்திரு ந் த கூலிப்படையினரை ஒன்று திரட்டினார். அவர்கள் காரில் முருகனை கடத்தியதுடன் ரூ.50 லட்சம் பணம் தருமாறு சுத்தி முனையில் மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன முருகன் உடனடியாக தனது உதவியாளர் மூலம் ரூ.15 லட்சம் தயார் செய்து மதுரை சாலையில் உள்ள ஒரு இடத்தில் வைத்து கொடுத்துள்ளார். பிறகு மீதி ரூ.35 லட்சத்தை தரா விட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரூ.35 லட்சத்தை தயார் செய்து தருவதாகவும், அதே இடத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறும் முருகன் கூறியுள்ளார். அந்த இடத்துக்கு பணத்தை வாங்குவதற்காக வீரபத்திரன் ஆர்.எம். காவனியைச் சேர்ந்த விஜய் (48) என்பவரை நிற்க வைத்துள்ளார். பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் அவரை பிடித்துக் கொண்டனர். அதன் பிறகு விஜயுடன் பேச முடியாமல் இணைப்பு துண்டிக்க ப்பட்டதால் கடத்தல் கும்பல் அதிர்ச்சியடைந்தனர்.
அவருடன் பேசியதை வைத்து தங்கள் இருப்பி விடுவார்கள் என நினைத்து மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் இருந்து முருகனை காரில் கடத்தி நத்தம் ரோட்டில் வந்தனர். சாணார்பட்டியை அடுத்த ஜோத்தாம்பட்டி பகுதியில் முருகனின் அனாதையாக நின்றது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்ற போது ரத்த வெள்ளத்தில் முருகன் இறந்து கிடந்தார். பணம் தங்களுக்கு கிடைக்காது என்பதாலும், போலீசாரிடம் சிக்கி விட்டால் முருகன் தங்களை காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற அச்சத்தாலும், ஏற்கனவே இருந்த பகையை பழி தீர்த்துக் கொள்ளவும் இந்த படுகொலை நடத்தப்பட்டது. போலீஸ் விசா என ரணையில் தெரிய வந்துள்ளது.
இக்கொலை தொடர்பாக வீரபத்திரன் (வயது 42). முருகனின் கார் டிரைவர் சேக்பரித், ஆர்.எம்.காலனி விஜய் (48), சரவணக்குமார் (36), கிழக்கு கோவிந்தா புரத்தைச் சேர்ந்த சங்கர் (35), செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அசோக் (25), ராஜா (40). மேற்கு அசோக் நகரைச் சேர்ந்த விஜயகுமார் (35) ஆகிய 8 பேரைபோலீசார் கைது செய்து ள்ளனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் கைப்பற்ற ப்பட்டுள்ளன.
இதனிடையே கொலை செய்யப்பட்ட முருகனின் உடல் உறவினர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நேற்று மதியம் திண்டுக்கல் கொண்டு வரப்பட்டது. இதை அறிந்ததும் அங்கு திரண்டதால் பரபரப்பான ஏராளமானோர் சூழல் ஏற்பட்டது
இது ஒருபுறம் இருக்க முருகன் கொலை தொடர்பாக காவல்துறையினர் அளித்த தகவல்கள் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த எஸ் பி பிரதீப், கோவில் தகராறு காரணமாக கொலை நடந்திருக்கிறது. குற்றவாளிகளை உடனடியாக பிடித்து விட்டோம் என்றார். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, காரை நிறுத்திவிட்டு அவர்களே நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்ததாக சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகுதான் கொலை நடந்த தகவலே போலீசாருக்கு தெரியும் என்கின்றனர் முருகனின் குடும்பத்தினர். இது ஒரு புறம் இருக்க கோவில் தகராறு என்றால், முருகனை கடத்தி 50 லட்சம் பணம் கேட்க வேண்டியதன் காரணம் என்ன? கடத்தல் கொலை வழக்கை கோவில் பிரச்சனை எனக் கூறி முடிக்க பார்க்கிறார்களா போலீசார்? என பல கேள்விகள் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications