கண், கை-கால்களை கட்டி.. ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்! இப்படி ஒரு கொலையா? திடுக்கிட்ட திண்டுக்கல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மாயமானதாகக் கருதப்பட்ட நபர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொலையாளிகள் அவரின் கண், கை, கால்களைக் கட்டி சித்திரவதை செய்து, கொடூரமாக கொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண் மற்றும் கை கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர்.

dindigul crime police

அங்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் தாலுகா காவல் நிலை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைப்பற்றி முதற்கட்ட விசாரணை தொடங்கினார்.

மேலும், கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தாலுகா காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் கொலைக்கான காரணம் என்ன?என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், உடல் இறந்த இடத்தில் மோப்ப நாய்கள் கொண்டும், தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் கை, கால்கள், வாய் உள்ளிட்டவை கட்டப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் அந்த இடத்தில் கொலை நடந்ததற்கான தடயங்கள் இல்லாத நிலையில் வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு அந்த உடல் இங்கு போடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கினார்.

முதற்கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மாயமானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் தான் என்பதை போலீசார் முதலில் உறுதி செய்தனர். தொடர்து உடல் இருந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், திண்டுக்கல் சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகன் மகன் பாலமுருகன் என்பதும், அவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பிலிருந்து பாலமுருகன் காணவில்லை என சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவரை கடத்தி கொடூரமாக சித்திரவதை செய்து, கொலை செய்து உடலை போட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையான பாலமுருகனுக்கு முன்பகை உள்ளதா? எதனால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கலில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் நடக்காமல் இருந்த நிலையில், மீண்டும் கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், காப்பிளியபட்டி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹேம தயாள வர்மன், வேடசந்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொருளாளர் மாசி, பேகம்பூர் பகுதி சேர்ந்த பிரபல ரவுடி முகமது இர்பான் என, கூத்தம்பட்டியில் ரஞ்சித் என 6 தினங்களில் 4 படுகொலைகள் நிறைவேறிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு ரவுடிகள் கை செய்யப்பட்ட நிலையில், குற்ற சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில், அதற்கு சேர்த்து வைத்தார் போல், கொடூர கொலை அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+