சமூக செயற்பாட்டாளர் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் காலமானார்
திண்டுக்கல்: சமூக செயற்பாட்டாளரான திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பால்பாஸ்கர் (வயது 62) மாரடைப்பால் இன்று காலமானார்.
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரான பால் பாஸ்கர், கிராமப்புற ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். குறிப்பாக நூற்பாலைகளில் பணிபுரியும் பெண்கள், வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு விவகாரங்களில் அக்கறையுடன் செயல்பட்டார்.

ஏழை மாணவர்களின் கல்விக்காக கல்வி நிறுவனங்களையும் உருவாக்கி நடத்தி வந்தார். 2011 சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் பாமகவின் வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 47817 வாக்குகளுடன் 2-ம் இடம் பெற்றவர் பால் பாஸ்கர்.
மத்திய அரசின் நிதி ஆயோக் நிலைக் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் பால்பாஸ்கர். கொரோனா லாக்டவுன் காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முடங்கி இருந்த வெளிமாநில இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமது அமைதி அறக்கட்டளை மூலம் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இடைவிடாது வழங்கினார் பால்பாஸ்கர்.
புதன்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட மாரடைப்பில் பால்பாஸ்கர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications