‛முருகன் பாடலில் மாறிய வரிகள்’.. ஸ்டாலினுக்கு மாணவர்கள் வைத்த ‛டிமாண்ட்’
திண்டுக்கல்: ‛உள்ளம் உருகுதய்யா முருகா' என்ற பாடலின் மெட்டில் வரிகளை மாற்றி இடிக்கப்பட்ட வகுப்பறைக்கு பதில் புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் வைத்த கோரிக்கை கவனம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக மாணவ-மாணவிகள் பாடிய பாடல் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே அம்மையநாயக்கனூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பள்ளியில் உள்ள கட்டடங்களில் 4 வகுப்பறைகள் சேதமாகி இருந்தன.

இதையடுத்து மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி அந்த 4 வகுப்பறை கட்டடங்களும் ஜேசிபி வாகனம் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வகுப்பறை கட்டடங்கள் இடித்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் புதிய கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படவில்லை.
பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்டி தர வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தாலும் கூட அவர்கள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளியில் இடபற்றாக்குறையால் மாணவ-மாணவிகள் மரத்தடியில் பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இனி மழைக்காலம் தொடங்கும் என்பதால் மாணவ-மாணவிகள் புதிய வகுப்பறை கட்டடங்கள் முக்கிய தேவையாக இருக்கிறது.
இந்நிலையில் தான் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என்பதற்காக மாணவ-மாணவிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது பள்ளி வகுப்பறையில் மாணவ-மாணவிகள் முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை வைத்து கைக்கூப்பி வணங்கியபடி புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என்று பாடல் பாடி கோரிக்கை வைத்துள்ளனர்.
‛உள்ளம் உருகுதய்யா முருகா' எனும் பாடல் மெட்டில் வரிகளை மாற்றி மாணவ-மாணவிகள் பாடல் பாடியுள்ளனர். அந்த பாடல் என்பது ‛‛எங்கள் அன்பு முதல்வா.. எனக்கு பள்ளி கட்டி தாங்க..
மழைக்காலம் வருதே.. மழைக்காலம் வருதே.. உடனே வேலையை தொடங்கிடுங்க..
முதல்வா.. எங்கள் அன்பு முதல்வா.. எனக்கு பள்ளியை கட்டித்தாங்க..
காலை சிற்றுண்டியால் வயிறும் - மனமும் நிறைந்ததய்யா..
காலை சிற்றுண்டியால் வயிறும் - மனமும் நிறைந்ததய்யா..
இடிந்த பள்ளியினை.. இடிந்த பள்ளியினை நீங்கள் விரைந்து கட்டுமய்யா..
எங்கள் அன்பு முதல்வா.. '' என்ற வகையில் அமைந்து இருந்தது.
இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டி கொடுக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
ஊரே ஒன்னு சேர்ந்து..செருப்பால் அடிச்சு! என்னங்க நடக்குது இங்க.. திருவிழானாலும் ஒரு நியாயம் வேண்டாமா? -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications