மிடியலையே.. ரெய்டு நடந்த திண்டுக்கல் ரத்தினம் வீடு முன் மகனும் ' வந்த' ஆதரவாளர்களும் அடித்த கூத்து!
திண்டுக்கல்: மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையின் போது திண்டுக்கல் ரத்தினம் வீடு முன் நடந்த கூத்துகள்தான் இப்போது டவுன் ஹாட் டாப்பிக்.
அரசியல் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை நடக்கிறது எனில் '100' நாள் வேலை திட்டத்துக்கு செல்வதைப் போல எங்கிருந்துதான் பெண்கள் கூட்டம் கூட்டமாக அழைத்துவரப்படுகிறார்களோ தெரியவில்லை? அத்தனை பேரையும் 'அடிப்பொடிகள்' திரட்டி வந்துவிடுகின்றனர்.

ரெய்டுன்னாவே அன்னதானம்: அப்புறம் உள்ளே அதிகாரிகள் துருவி துருவி சோதனை நடத்த,, வெளியே சூடாக இட்லி, பொங்கல், உப்புமா, டீ, காபி என ஜெகஜோதியாக 'அழைத்துவரப்பட்ட' ' ஆமாம்சாமிகளுக்கு' அன்னதானம்தான்! அவ்வப்போது அல்லக்கைகள் இருப்பை காட்ட அசால்ட்டா இரண்டு மூன்று கோஷங்கள்! இப்போது தமிழ்நாட்டில் ரெய்டு நடந்தாலே இந்த பேஷன் ஷோ நடப்பது சகஜமாகிவிட்டது.
சேகர் ரெட்டி கூட்டாளி ரத்தினம்: கடந்த 3 நாட்களாக மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை புதுக்கோட்டையில் தொடருகிறது. திண்டுக்கல்லில் சேகர் ரெட்டியின் கூட்டாளியான மணல் மாஃபியாக்களில் ஒருவர் என கை நீட்டப்படும் சோ கால்ட் 'தொழிலதிபர்' ரத்தினத்தின் வீட்டில் மீண்டும் சோதனை நடைபெற்றது. ஏற்கனவே சேகர் ரெட்டியுடன் சேர்ந்து 'கூட்டாளி' என்ற அடைமொழியுடன் சிறைவாசம் கண்டவர்தான் திண்டுக்கல் ரத்தினம்.
2 நாளாக வாக்கிங் போன ரத்தினம்?: திண்டுக்கல் ரத்தினம் வீட்டில் 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 'ரத்தினத்தின்' திருமுகம் வீடியோ பதிவுகள் எதிலும் இடம்பெறவில்லை. முதல் நாள் சோதனையின் போது வாக்கிங் போனவர் '2 நாளாக' வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார் என்பது ஒரு தகவல்.
50 பேராக திரண்ட பெண்கள்: இதனிடையே திண்டுக்கல் ரத்தினம் வீட்டில் நேற்று மாலை 2 நாள் 'ரெய்டு' ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அப்போது வீட்டுக்கு வெளியே 50, 60 பெண்கள் திரண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் 'சுயேட்சையாக' போட்டியிட்டு 'திமுக'வில் ஐக்கியமான ரத்தினத்தின் மகன் வெங்கடேசனின் ஆதரவாளர்களாம்.
கூவுவங்கம்மா.. : அமலாக்கத்துறை அதிகாரிகளை வழி அனுப்பிய கையுடன் '50' பேராக திரண்டிருந்த பெண் ஆதரவாளர்களுக்கு 'அல்லக்கைகள்' புடைசூழ நன்றி தெரிவித்தார் வெங்கடேஷ். அப்போது 'ஆர்வ கோளாறு அல்லக்கைகள் ' உங்களுக்கு ஆதரவாக இருப்போம்னு சொல்லுங்க என உசுப்பிவிட சொரத்தே இல்லாமல் முழங்கினர். இதை கண்டு வெங்கடேசன் பூரித்துப் போனார். அத்துடன் நிற்காமல், நாங்க இருக்கோம் என இன்னொரு அல்லக்கை 'கூவ' அதையும் கிளிப்பிள்ளை போல சொன்னர் '50' பேராக திரண்டிருந்த பெண்கள். ஆஹா.. நமக்கும் இத்தனை பேரை கூட்டி வந்த 'மாஸ்' காட்டிவிட்டார்கள் என அமலாக்கத்துறை குடைந்தெடுத்த துயரை மறைத்து மகிழ்ந்து போனார் ரத்தினம் மகன் வெங்கடேசன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications