அமித்ஷாவா?.. அவதூறு ஷாவா?.. திண்டுக்கல்லில் வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1595 கோடியில் 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 111 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் அமித் ஷாவா? அவதூறு ஷாவா? என்ற சந்தேகம் வருகின்றது. அந்தளவுக்கு உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார் என்று கூறியுள்ளார்.
தமிழக இந்து அறநிலையத் துறை, மின்சாரம், வருவாய்த்துறை உள்ளிட்ட ஏழு துறைகளை சார்ந்த 174.20 கோடி மதிப்பிலான 212 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், விழா மேடையில் வருவாய் துறை உள்ளிட்ட 18 துறைகள் மூலம் 2 லட்சத்து2, 62,864 பயனாளிகளுக்கு ரூபாய் 1000 கோடியே 82 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல்லுக்கு முக்கிய அறிவிப்புகள்
தொட்ரந்சு, திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ரூ. 16 கோடியில் நிறைவேற்றப்படும். திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள பழைய பாதள சாக்கடைகள், சுத்திகரிப்பு நிலையம் ரூ. 8 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும். பழனி இடும்பன் குளம், சண்முகாநதி ரூ. 6 கோடியில் சீரமைக்கப்படும். புதிய நத்தம் கலை அறிவியல் கல்லூரிக்கு 18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி பகுதியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் ஆலை ரூ. 7 கோடியில் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பொங்கலை வரவேற்க காத்திருக்கும் உங்களுக்கு இனிப்பான சக்கரைப் பொங்கல் அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் கொள்முதல் செய்யப்பட்ட நெல் 1.79 கோடி மெட்ரிக் டன். ஆனால், திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் 1.99 கோடி மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
2019 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டார். தற்போது தமிழகத்தை சேர்ந்த 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்துள்ளோம். மக்கள் நலனுக்காக நாம் செய்யும் திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள் இல்லாத பிரச்னையை கூறி குளிர் காயலாம் என நினைக்கின்றனர்.
அமித் ஷாவா? அவதூறு ஷாவா?
தமிழகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து சமீபத்தில் பேசியிருந்தார். அவர் அமித் ஷாவா? அவதூறு ஷாவா? என்ற சந்தேகம் வருகின்றது. அந்தளவுக்கு உண்மைக்கு புறம்பாக பேசி சென்றுள்ளார். தமிழகத்தில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாடுகளுக்கு முடிவுகட்டும் வகையில் அரசு செயல்படுகிறது எனப் பேசியுள்ளார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நமது அரசு பொறுப்பேற்ற பிறகு இப்போது வரை சுமார் 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். அவருக்குப் புரியம்படி சொல்ல வேண்டும் என்றால் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். இப்படி ஒரு சாதனையை பாஜக ஆளும் மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். 7701 கோடி மதிப்பிலான கோயிலுக்குச் சொந்தமான 7,655 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளோம். உண்மையாக பக்தர்கள் நம் அரசை பாராட்டுகிறார்கள்.
மக்கள் திமுக பக்கம்
தலைமைச் செயலகத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்து சமய அறநிலையத் துறை பணிகளைத் தொடங்கி வைத்து வருகின்றேன். எங்கள் ஆட்சியில் இந்து சமய அறிநிலையத் துறை சார்பில் செய்த பணிகளை பட்டியலிட்டால் ஒரு நாள் முழுவதும் பேசலாம். அதனால் தான் பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கின்றது. ஆன்மீகப் பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாக உள்ளது. இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை அமித் ஷா சொல்வது அவரது பதவிக்கு கண்ணியம் அல்ல.
ஸ்டாலின் இருக்கும்வரை தமிழகம் கலவரம் செய்ய நினைப்பவர்களின் எண்ணம் நடைபெறாது. தமிழகத்தில் அமித்ஷா ஒரு நல்ல கேள்வியை கேட்டுச் சென்றுள்ளார். நாம் கேட்க வேண்டிய கேள்வியை அவரே கேட்டுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். தமிழகத்தில் மோடி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று அமித் ஷா மக்களைப் பார்த்து கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டை நாங்கள் ஆள வேண்டுமா, அல்லது தமிழகத்திற்குச் சம்மபந்தமே இல்லாத டெல்லியில் இருப்பவர்கள் ஆள வேண்டுமா என்பது தான் இந்த தேர்தல். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் டெல்லியில் இருக்கும் பாஜகதான் ஆளும் என்பதை நாங்கள் சொல்லி புரிய வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அமித் ஷா நேரடியாகவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டுச் சென்றுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் மறைமுக பாஜக ஆட்சி நடைபெற்றது. கடந்த 5 ஆண்டுகளாக அதிலிருந்து மீண்டு தமிழ்நாடு தலைநிமிர ஆரம்பித்துள்ளது. மக்கள் திமுக பக்கம்தான் இருக்கிறார்கள். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். திராவிட மாடல் 2.0 இல் இன்னும் சாதனைகள் படைப்போம் என்று கூறினார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
திண்டுக்கல்லில் கல்யாண மண்டபத்தில் ஓடிப்போன மணமக்கள்.. ஒரு போன் காலால் ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications