ரூ.140 கட்டியவருக்கு 11 லட்சம்.. பிரபல கூரியர் நிறுவனத்திற்கு திண்டுக்கல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திண்டுக்கல் : 140 ரூபாய் கட்டி அனுப்பிய மருத்துவ குணம் கொண்ட தேனை டெலிவரி செய்ய தவறிய தனியார் கூரியர் நிறுவனத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்து திண்டுக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து 140 ரூபாய் கட்டி, தான் அனுப்பிய மருத்துவ குணம் கொண்ட புற்றுத்தேனை, வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யாமல், அந்த பாட்டிலை உடைத்ததாக வியாபாரி ஒருவர் கூறிய புகாரின் பேரில் தனியார் கூரியர் நிறுவனம் 11 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் சீலன் அக்ரோ சென்டர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தேனின் மகரந்தம் புற்று தேன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவருக்கு ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படும் புற்று தேனை திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியார் கூரியர் நிறுவனம் மூலமாக அனுப்பி வைத்திருக்கிறார்..
இதற்கான கட்டணமாக 140 ரூபாயை அவர் செலுத்தியிருக்கிறார்.. ஆனால் நான்கு நாட்கள் ஆன நிலையிலும் எடப்பாடியைச் சேர்ந்தவருக்கு மருத்துவ குணம் கொண்ட தேன் அடங்கிய பார்சல் போய் சேரவில்லை. திருச்செங்கோடுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் சம்பந்தப்பட்ட நபருக்கு டெலிவரி செய்யப்படவில்லை.
சம்பந்தப்பட்ட நபர் ராமசாமி பார்சல் குறித்து விசாரித்த நிலையிலும் பார்சல் வரவில்லை என ஊழியர்களால் கூறப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்திற்கு பிறகு முகவரி சரியாக இல்லை என்ற அடிப்படையில் தேன் பார்சல் மீண்டும் திருநெல்வேலி கொண்டுவந்துள்ளார்கள். அதனை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி ஜெயசீலனை தொடர்பு கொண்டு கூரியர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது..
நேரில் சென்று பார்த்த போது மருத்துவ குணம் கொண்ட தேன் பாட்டில் உடைக்கப்பட்டு வீணாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயசீலன் பார்சலை திரும்ப பெற மறுத்துவிட்டார். இந்த நிலையில் தனியார் கூரியர் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பொது மேலாளர்கள் ( 2 பேர்), திருநெல்வேலி கிளை மேலாளர் ஆகிய நால்வர் மீது திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் வியாபாரி ஜெயசீலன் வழக்கு தொடர்ந்தார்.
இரண்டு ஆண்டுகள் வழக்கு நடந்த நிலையில், தேன் விற்பனை நடத்துவதால் ஜெயசீலனை நுகர்வோராக கருத முடியாது என திருநெல்வேலி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜெயசீலன் சென்னையில் உள்ள நுகர்வோர் ஆணையத்தை அணுகி மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட ஆணையம் வழக்கு விசாரணையை திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நடத்த உத்தரவு பிறப்பித்தது.
திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதன்படி பிரபல தனியார் கூரியர் நிர்வாக இயக்குனர் முதல் கிளை மேலாளர் வரை நான்கு பேரும் இணைந்து புற்றுத்தேன் மதிப்பு 75 ஆயிரத்தை ஜெயசீலனுக்கு வழங்க வேண்டும். வழக்கு செலவிற்கு 25 ஆயிரம் ரூபாயும், நுகர்வோர் இழப்பீடாக 10 லட்சம் ரூபாயும் ஜெயசீலனுக்கு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications