கொலைநகராகும் திண்டுக்கல்.. வெறும் 12 மணி நேரத்தில் மூவர் படுகொலை! உறைந்துபோய் கிடக்கும் பொதுமக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது புளியமரத்துசெட். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுநாடார். இவருக்கு ஈஸ்வரன்(55). மகேந்திரன்(50) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வரும் இவர்களுக்குச் சொந்தமாகத் தோட்டம் ஒன்று உள்ளது.

சரமாரி வெட்டு
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஈஸ்வரனுக்கும், மகேந்திரனுக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அண்ணன் ஈஸ்வரன், தம்பி மகேந்திரனை நுங்கு வெட்டும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தம்பி ஓடினார்.

உயிரிழந்தார்
இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மகேந்திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழுத்து அறுத்து படுகொலை
அதேபோல திண்டுக்கல் முருகபவனம் அருகே லோடுமேன் சிவக்குமார் என்பவரின் மகன் பிரபாகர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடித்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீடு புகுந்து கழுத்து அறுத்து பிரபாகர்(20) என்ற இளைஞரை கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இந்த கொலை குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முன்விரோதம்
இது மட்டுமின்றி நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கதிரயன் குளம் அருகே முன் விரோதம் காரணமாகச் சிவா என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றிய உடல்கூறு ஆய்விற்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

வெறும் 12 மணி நேரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே இரவில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவமானது அரங்கேறி குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், தற்போது கொலை சம்பவங்களும் அரங்கேறியுள்ளது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. மூன்று இடங்களில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications