திருப்பதி லட்டில் மாடு, பன்றி கொழுப்பு.. திண்டுக்கல் கம்பெனி அனுப்பிய நெய்தான் காரணமா?
திண்டுக்கல்: உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக கிடைத்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருமலைக்கு நெய் சப்ளை செய்தது திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி என்பது தெரியவந்துள்ளது.
திருப்பதி என்றாலே லட்டு தான் மிகவும் பிரபலம். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வரும் பக்தர்கள் அனைவருமே லட்டு பிரசாதத்தை வாங்காமல் வர மாட்டார்கள். திருப்பதி ஏழுமலையான் மீது கொண்ட அன்புக்கு இணையாக லட்டு மீது பக்தர்கள் வைத்திருக்கும் பாசமும் அதிகம்.

இந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக லட்டுவை சுற்றி மிகப்பெரிய சர்ச்சை வெடித்திருக்கிறது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு,” திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருக்கும் செய்தியை கேட்டு பலத்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது கட்சியினரும் அவமானப்பட வேண்டும். இது மிகப்பெரிய அபச்சாரம்” என கூறியது தேசம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது தொடர்பாக பேசிய தெலுங்கு தேசம் கட்சி சேர்ந்த வெங்கடரமண ரெட்டி,” திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய் குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் பரிசோதனைக்கு உட்பட்டதில் மீன் எண்ணெய், பன்றியின் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, பாமாயில் சோயா எண்ணெய் ஆகியவை கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றார்.
மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தானம் லட்டு தயாரிப்பதற்காக ஒரு நாளைக்கு 15 கிலோ பசு நெய்யை பயன்படுத்துகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஏஆர் ஃபுட்ஸ் நிறுவனம், ஒரு கிலோ நெய்யை 320 ரூபாய் என்ற விலைக்கு வழங்குகிறது. இந்த நெய் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு பன்றியின் கொழுப்பு திசு மூலம் பெறப்பட்ட அரை-திட வெள்ளை கொழுப்பு தயாரிப்பு ஆகும்” எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கிடையே தமிழகத்தைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் இ டெண்டர் மூலம் நெய் வழங்க தேவஸ்தான டெண்டரில் கலந்து கொண்டது. அவை மொத்தம் 68,000 கிலோ நெய்யை சப்ளை செய்துள்ளன. அதில் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் 20,000 கிலோ நெய்யை சப்ளை செய்த நிலையில் அதில் கலப்படம் இருப்பதாக திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது.
கடந்த ஜூன் மாதமே ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தரமற்ற நெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. பொதுவாக, நெய்யை வாங்கும்போது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உள்ளிட்ட சான்றிதழ்கள் வைத்திருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள், சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே பரிசோதனை செய்வார்கள் அந்த வகையில் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு 8.50 லட்சம் லிட்டர் நெய் வழங்க ஆர்டர் கொடுத்திருந்தது தேவஸ்தானம். இதுவரை இந்நிறுவனம் 68,000 கிலோ நெய்யை அனுப்பியுள்ளது. இதில் 20,000 கிலோ நெய் மிகவும் தரமற்றதாக இருந்ததால் திருப்பி அனுப்பி வைத்தளாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியமளா ராவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தமிழகத்தின் திண்டுக்கல்லை சேர்ந்தது எனவும், ராஜ் பால் என்ற பெயரில் பால் சப்ளை செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் திருப்பதியில் லட்டு செய்வதற்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம் கருப்பு பட்டியலில் வைத்ததோடு, இருப்பில் இருந்த நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது. திருப்பதி தேவஸ்தானம்.
இதற்கிடையே," தேவஸ்தானம் பெற்ற நெய்யில் நாங்கள் அனுப்பியது ஒரு சதவீதத்துக்கும் கீழ் தான் உள்ளது, எங்களது நெய்யின் தரத்தை உறுதி செய்ய எந்த ஆய்வுக்கும் உட்பட தயார். திருப்பதி தேவஸ்தானம் எழுப்பிய கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக பதில் அளித்து வருகிறோம். தற்போது வரை நாங்கள் அனுப்பிய நெய் மிகவும் தரமானது. இதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயாராக உள்ளோம். அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு, சான்றிதழகள் பெற்று தான் நாங்கள் நெய் சப்ளை செய்தோம். " என திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற நெய்யை வழங்கியதாக கூறி தடை பட்டியலில் வைக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த A.R. டெய்ரி ஃபுட்ஸ் விளக்கம் அளித்துள்ளது. அதே நேரத்தில் தேவஸ்தானத்தில் இருந்து எவ்வளவு நெய் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications