என் தொகுதியில் 20,000 பேர் மிஸ்ஸிங்! ‘SIR' பணியில் குளறுபடி! மீண்டும் பரபர புகார் சொன்ன அமைச்சர் ஐபி
திண்டுக்கல்: SIR பணி முறையாக நடைபெறவில்லை குளறுபடி நடக்கிறது, ஒன்றிய அரசு உடனடியாக SIR ஐ ரத்து செய்ய வேண்டும் எனவும், என்னுடைய தொகுதியில் 22 ஆயிரம் பேர் நீக்கி உள்ளார்கள் எனவும், இது சம்பந்தமாக நான் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி உள்ளேன் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று 06.12.25 வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.
இதில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டு புரட்சியாளர் அம்பேத்கருக்கு வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும்.

ஐ பெரியசாமி
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் எந்த கருத்தும் இதுவரை கூறவில்லை என்பது குறித்து விஜய் இடம் தான் கேட்க வேண்டும். இவர் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் கண்டிப்பாக கருத்து கூறுவார்கள். எஸ்ஐஆர் பணிகள் குறித்த எனது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரே இரவில் குடி பெயர்ந்தவர்கள் இறந்தவர்கள் எனக் கூறி 22,000 வாக்காளர்களை நீக்கி உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் பணி
பிஎல்ஓ-கள் வாக்காளர்களை சேர்ப்பதற்காக வீடு வீடாக செல்லவில்லை. அறையில் அமர்ந்து ஒரே இரவில் நீக்கி விட்டார்கள். வாக்காளர்கள் முறையாக பூர்த்தி செய்த கொடுத்த விண்ணப்பித்தினையே குடிபெயர்ந்து விட்டனர் எனக் கூறி மாற்றிவிட்டனர். இதுபோன்ற அதிசயம் ஆத்தூர் தொகுதியில் நடைபெற்றுள்ளது. சூப்பர் செக் மூலம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறுவது தவறு. எந்த ஊரிலும் போய் அவர்கள் ஆய்வு மேற்கொள்ளவில்லை.
பெரியசாமி குற்றச்சாட்டு
இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர் பாலக்கனூத்து நரிப்பட்டி, நீல மலைக்கோட்டை போன்ற பகுதியில் இறந்தவர்களை வாக்காளர் பட்டியல் சேர்த்துள்ளனர். எஸ் ஐ ஆர் பணிகள் மிகவும் குளறுபடியாக உள்ளது. அவர்கள் எங்குமே சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கவில்லை கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக வேலை பார்த்து வருகின்றனர். எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக சரியாக நடைபெறவில்லை. ஆகையால் எஸ்ஐஆர் பணிகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எஸ் ஐ ஆர் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேல் முறையீடு செய்வது என்பது எங்களது அடிப்படை உரிமை நீதிமன்றம் கொடுக்கக்கூடிய தீர்ப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டம் இல்லை. சட்டமே சொல்கிறது உங்களது உரிமைகளை பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் என கூறியுள்ளது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்" என தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications