உங்களை நம்பிதான்பா..விஜய் பேசிட்டு இருக்கும் போதே! திமுகவில் தவெக புள்ளிகள்! வேடசந்தூரில் ட்விஸ்ட்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இன்று நடைபெற்ற தவெக பொதுக்குழுவில் பேசியபோது தொண்டர்களை நம்பி அரசியலில் இறங்கி இருப்பதாகவும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேசி இருந்தார். ஆனால் விஜய் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான தமிழக வெற்றிக் கழகத்தினர் திமுகவில் இணைந்து தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 25) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்துகொண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

விஜய் தவெக
நிகழ்ச்சியில் பேசிய விஜய்," நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன். நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அப்படியெல்லாம் இல்லை. இப்படிப்பட்ட அழுத்தங்களுக்கு அடங்கிப் போகிற ஆளா நான்? அழுத்தம் இருக்கிறதா என்றால், அழுத்தம் உள்ளது. ஆனால் அது நமக்கு இல்லை. மக்களுக்கு இருக்கிறது. மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் இன்று கடும் அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
தமிழக வெற்றி கழகம்
தவெக மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும்
யாரென்ன சூழ்ச்சி செய்தாலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் தாம் அடங்கிப் போக மாட்டேன் என்றும், தவறு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற பயம் இருக்க வேண்டும். கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் தங்களது அரசியலை சமரசம் செய்து கொள்ளக் கூடாது" என பேசியிருந்தார்.
திமுகவில் தவெக நிர்வாகிகள்
ஆனால் விஜய் மாமல்லபுரத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏராளமான திமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருக்கின்றனர். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய பிரபலங்கள் முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகின்றனர்.
வீரா எஸ்டி சாமிநாதன்
அந்த வகையில் வேடசந்தூரில் திமுக ஒன்றிய செயலாளரான வீரா எஸ்டி சாமிநாதன் முன்னிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குப்பட்ட மோர்பட்டி மேற்கு தவெக கிளைச் செயலாளர் பிரபாகர் மற்றும் கிளைத் துணைச் செயலாளர் பாரதிராஜா தலைமையில் தவெகவைச் சேர்ந்த ரஞ்சித்குமார், எம்.கருணாகரன், வெள்ளிமலை, சிவக்குமார், பிரபாகரன், அருள்ராஜ், மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்து இருக்கின்றனர்.

வேடசந்தூர் தொகுதி
2026 சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் வீரா சாமிநாதன் தான் திமுக சார்பில் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் கட்சியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொங்கல் பரிசு, நிர்வாகிகள் ஆலோசனை, பொதுக்கூட்டம் என பிரம்மாண்டம் காட்டி வரும் அவர் தற்போது தமிழக வெற்றி கழகத்தினரை மொத்தமாக திமுகவில் இணைய வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தினர் 3000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட் -
தமிழக பள்ளிகளில் விபூதி - குங்குமம் வைத்து செல்ல தடையா? கல்வி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை










Click it and Unblock the Notifications