அடடே திண்டுக்கல் பக்கம்.. யாருன்னு பாருங்க.. பின்னி பிணைந்து.. வைரலாகும் வீடியோ
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே இரண்டு பாம்புகள் ஒன்றோடொன்று பிணைந்து நடனமாடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா வடமதுரை அருகே உள்ள சிங்கார கோட்டையில், நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒன்றோடொன்று ஒன்றாக இணைந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தது.

அந்த காட்சியை அருள் என்பவர் தனது செல்போனில் படமாக பிடித்தார். சுமார் அரை மணி நேரமாக இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம் ஆடியதை அப்பகுதி மக்கள் அச்சத்துடனும், ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆட்கள் கூடியபோதும், அச்சமில்லாமல் இரு பாம்புகளும், கூடிக் களித்துக் கொண்டுள்ளன. அந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.
அடடே திண்டுக்கல் பக்கம்.. யாருன்னு பாருங்க.. பின்னி பிணைந்து.. வைரலாகும் வீடியோ pic.twitter.com/QbDB2SigDy
— Oneindia Tamil (@thatsTamil) July 24, 2020


Click it and Unblock the Notifications
