பழநி தனி மாவட்டம் உருவாகிறதா? இப்பவே வரிந்து கட்டி போராடும் உடுமலை- பொள்ளாச்சி பொதுமக்கள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியை (பழனி) மையமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட இருக்கிறது. ஆனால் பழநி மாவட்டத்துக்குப் பதில் பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அமைக்க வேண்டும்; பழநி மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளை இணைக்க கூடாது என இப்போதே போராட்டங்கள் வெடிக்கவும் தொடங்கிவிட்டன.

மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவானதுதான் திண்டுக்கல். இம்மாவட்டத்தின் முக்கிய வருவாய் பகுதியாக இருப்பது பழநி. ஆனால் பழநியை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைத்து தரப்படும் என 2021 சட்டசபை தேர்தலின் போதே திமுக வாக்குறுதி அளித்தது. அதேநேரத்தில் பழநி தனி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளை இணைப்பது என்பதில் பெரும் குழப்பமும் நீடித்து வந்தது.

palani pollachi tamilnadu budget 2025 2025

திண்டுக்கல் மாவட்டத்தின் மற்றொரு வருவாய் பகுதியான கொடைக்கானல்
மற்றும் கரூர் மாவட்டத்தை ஒட்டிய வேடசந்தூர் வட்டங்களை புதிய பழநி மாவட்டத்தில் இணைக்கக் கூடாது என்கிற குரல் வலுத்து வந்தது. இதனால் கொடைக்கானல், வேடசந்தூர் வட்டங்களுக்கு பதிலாக உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய திருப்பூர் மாவட்டப் பகுதிகளை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்கலாம் என்கிற ஆலோசனைகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகின. தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பும் வெளியாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்தே பழநி மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளை இணைக்கவே கூடாது என அப்பகுதி பொதுமக்கள், தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்; உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளை இணைப்பதன் மூலம் பழநி மாவட்டத்தில் இடம் பெறக் கூடிய ஒட்டன்சத்திரம் பகுதிக்கு அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து நீரை கொண்டு செல்லக் கூடிய திட்டம் இருக்கிறது; இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என்கின்றனர் விவசாயிகள்.

இதனால் பழநி தனிமாவட்டம் என்பதைக் கைவிட்டுவிட்டு பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்குவதுதான் சரியாக இருக்கும்; கோவைக்கும் வால்பாறைக்கும் இடையேயான தொலைவு சுமார் 100 கிமீக்கும் அதிகம். இதனால் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி பொள்ளாச்சி தனி மாவட்டம் அமைப்பதுதான் மிக சரியானதாக இருக்கும்; கடந்த கால அதிமுக ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் தொழில்துறையினர்.

தற்போது தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் பழநி மாவட்டமே வேண்டாம்.. பொள்ளாச்சி மாவட்டம்தான் வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. அனைவரும் தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் பொள்ளாச்சி தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தும் வாசகங்களை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நூதனப் போராட்டங்களையும் கையில் எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவையினர் தெரிவிக்கையில், சிலர் பழநி இந்த குழப்பத்திற்கு முடிவு காணும் வகையிலும் உடுமலை மடத்துக்குளம் பகுதிகள் கோவை மண்டலத்தில் உள்ளன; பழனி ஒட்டன்சத்திரம் பகுதிகள் தென் மாவட்ட பகுதிகளாகவும் மதுரை மண்டலத்தில் உள்ளன; எனவே தென் மாவட்ட பகுதிகளில் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளை இணைக்க வேண்டாம் என்கின்றனர். இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர் கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+