பழனிக்கு பாத யாத்திரை சென்ற வானதி சீனிவாசன் செம டென்ஷன் - சேகர் பாபு மீது காட்டம்
திண்டுக்கல்: சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று அதிமுக பாஜக வியூகம் வகுத்து வருகிறது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பழனி கோயிலுக்கு பாத யாத்திரை சென்றுள்ளார். அப்போது அங்கு சுகாதார சீர்கேடு நிலவுவதாக கூறி அமைச்சர் சேகர் பாபு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பழனி தண்டாயுதபாணி முருகனை தரிசிப்பதற்காக கோவையில் இருந்து பாத யாத்திரையாக புறப்பட்டார். பொள்ளாச்சி, உடுமலை வழியாக வானதி சீனிவாசன் பழநி சென்றார். பிறகு அங்கு பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.

பழனிக்கு யாத்திரை
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "விரதம் கடைபிடித்து பழனிக்கு யாத்திரை வந்துள்ளேன். பொதுவாக பழநி கோயிலுக்கு வருகைதரும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித சண்முகநதியில் சென்று நீராடி செல்வது தான் நமது மரபு. ஆனால் இன்று புனித நதியான சண்முகநதி முழுக்க, முழுக்க சுகாதார சீர்கேடு அடைந்து உள்ளது.
பழனி வரும் பக்தர்கள் சண்முகநதியில் இறங்க யோசிக்கும் அளவிற்கு தான் திராவிட மாடல் அரசு இந்து பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் கேட்டால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வாய்கிழிய பேசுகிறார். திராவிட மாடல் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.
மக்கள் துயரம்
முருகன், விபூதி, கோயில்கள் தான் தமிழர்களுடைய அடையாளம். திராவிட மாடல் என்று சொல்லி ஆன்மாவையே பிரித்து எடுத்து விட்டு தமிழகத்தை ஆட்சி செய்கிறது திமுக. இந்த ஊழல் மிகுந்த ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில்லை. ஒவ்வொருநாளும் தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்துகிறார்கள். இந்த அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்.
விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். மத்தியில் பிரதமர் மோடியின் சிறந்த திட்டங்கள் எல்லாம் அமல்படுத்தி, தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக சார்பில் பலர் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வோம்.
டப்பா.. டோப்பா..
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் கூட்டத்தை பிரதமர் மதுராந்தகத்தில் தொடங்கி வைத்துள்ளார். லட்சக்கணக்கானோர் கூடிய கூட்டத்தை கண்டு திராவிட மாடல் அரசில் உள்ளவர்கள் மிகுந்த பதற்றத்தில் உள்ளார்கள். அதனால் தான் டப்பா எஞ்சின் என்று பேசுகிறார்கள். டப்பா, டோப்பா ஆகியவை எல்லாம் எங்களுக்கு தெரியாது. இதெல்லாம் திராவிட மாடல் அரசுக்கு சொந்தமானது" என்றார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications