வத்தலகுண்டு சோதனை சாவடி போலீசாரை.. தென்னம் மட்டையை எடுத்து வெளுத்த இளைஞர்கள்.. பகீர் வீடியோ
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சோதனை சாவடியில் போலீசாரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே திண்டுக்கல்- மதுரை மாவட்ட எல்லையில் உள்ள விருவீடு கிராமத்தில் சோதனைச் சாவடி உள்ளது. இன்று காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள நல்லதேவன் பட்டியைச் சேர்ந்த முத்து மாணிக்கம் (24), ரஞ்சித் (23), காளிதாஸ் (33) உள்ளிட்ட ஆறு பேர் இரண்டு இருசக்கர வாகனங்களில் வத்தலகுண்டு நோக்கிச் சென்றுள்ளனர்.
அப்போது உசிலம்பட்டி சாலையில் விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவர்களின் வாகனம் ஒன்று போலீசார் அமைத்திருந்த சோதனைச்சாவடி பேரிகார்டு மீது மோதியது.

விசாரணை
அப்போது அங்கு பணியில் போலீசார் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக போலீஸாருக்கும் அந்த இளைஞர் இயக்கம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதம் முற்றி இருவரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது.

போலீசார் தாக்குதல்
இதையடுத்து இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்டோர் அருகில் இருந்த தென்னம் மட்டையை எடுத்து போலீசாரை தாக்க தொடங்கினார் இதனையடுத்து போலீசாரும் அந்த இளைஞர்களுடன் பதிலுக்கு சண்டை போட தொடங்கினர்.

குடிபோதை
இறுதியாக போலீசார் மீது தாக்குதல் நடத்தி இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர் இளைஞர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், சோதனைச் சாவடியில் நிற்காமல் வேகமாகச் சென்றதால் தடுப்புகள் மீது மோதியதாகவும் கூறப்படுகிறதுங

தாக்கி உள்ளனர்
இதைத் தட்டிக்கேட்ட சோதனை சாவடி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்க வந்ததாகவும் திண்டுக்கல் மாவட்ட போலீஸார் தெரிவித்தனர் போலீஸாரை, இளைஞர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications