Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் பழனியில் திருமணத்துக்கு பெண்ணே கிடைக்காததால்.. தாங்க முடியாமல் தாய், மகன் எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கிருஷ்ணன் கோவில் சந்து பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் ஜெயா தம்பதியின் மகன் வினோத் வசித்து வருகிறார். வினோத்திற்கு 34 வயது ஆகிறது. திருமணத்துக்கு பல இடங்களில் பெண் தேடியும் இதுவரை பெண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த வினோத்தும் அவரது தாய் ஜெயாவும் எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.

இன்றைக்கு பெண் கிடைப்பது என்பது பல சமூகத்தில் சவாலாக மாறிவிட்டது. இதனால் 10 வருடம், 12 வருட வித்தியாசத்தில் எல்லாம் திருமணம் நடப்பது அதிகமாகிவிட்டது. திருமண வயதில் பெண் இருக்கிறதா என்று ஒவ்வொரு ஊரிலும் பெற்றோர்கள் தீவிரமாக தேடுகிறார்கள். அப்படியே பெண் இருந்தாலும் ஜாதகம் செட்டாவது இல்லை.. இல்லை பெண் வீட்டார், மணமகன் நன்கு படித்து நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

What did a mother and son do when they couldn t find a woman to marry in Palani Dindigul district

இன்றைக்கு இளம் பெண்கள் எல்லாருமே இப்போது சராசரியாக டிகிரி படிக்கும் அளவிற்கு மாறிவிட்டார்கள்.. இதனால் சரியாக படிக்காத, நல்ல வேலையில் இல்லாத இளைஞர்கள் திருமணம் செய்வது என்பது இப்போதைய சூழலில் சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக கூலி வேலை செய்யும் இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதே இல்லை. இதனால் பல இளைஞர்கள் ஏன் படிக்காமல் போனோம் என்று நொந்து போய் இருக்கிறார்கள்.

நன்கு படித்து நல்ல வேலையில் இருந்தாலும், அழகாக இருக்க வேண்டும், குறைந்த வயதாக இருக்க வேண்டும்.. எந்த கடனும்இருக்கக்கூடாது.. சொந்த வீடு இருக்க வேண்டும்.. லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும் என்கிற அளவிற்கு எதிர்பார்ப்புகள் இப்போது அதிகமாகிவிட்டது. இதனால் நன்கு சம்பாதித்தாலும், வயது, தோற்றம் காரணமாக பணக்காரர்களுக்கே பெண் கிடைப்பதும் சவலாக உள்ளது. இந்நிலையில் பெண் கிடைக்காத விரக்தியில் சிலர் தவறான முடிவு எடுக்கிறார்கள். அப்படித்தான் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு இளைஞர் தவறான முடிவெடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கிருஷ்ணன் கோவில் சந்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். அவருடைய மனைவி ஜெயாவுக்கு 64 வயது ஆகிகிறது. சுப்பிரமணியன் ஜெயா தம்பதிக்கு 34 வயதில் வினோத் பிரபு என்ற மகன் இருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அதன்பிறகு வீட்டில் தாயும், மகனும் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். வினோத்பிரபு கூலி வேலை செய்து வந்திருக்கிறார்.

நேற்று காலை ஜெயாவின் வீடு நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்திருக்கிறது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டு கதவை தட்டியபடி ஜெயாவை அழைத்துள்ளனர். ஆனால் உள்ளே இருந்து யாரும் பதிலளிக்கவில்லை. உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றர்.

பின்னர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது படுக்கை அறையில் ஜெயாவும், வினோத்பிரபுவும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுப்பிரமணியன்-ஜெயா தம்பதிக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில், முதல் மகனுக்கு சிறுவயதிலேயே மனநல பாதிப்பு ஏற்பட்டதால் அவரை தனியார் காப்பகத்தில் பெற்றோர் ஒப்படைத்துவிட்டார்களாம்.

இதற்கிடையே சுப்பிரமணியன் இறந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயாவுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாம். அதேநேரம் வினோத்பிரபுவுக்கும் திருமணத்துக்கு பெண் கிடைக்கவே இல்லையாம். இதனால விரக்தி அடைந்த தாயும், மகனும் மருந்து குடித்து உயிரை விட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும் போலீசார் வேறு காரணங்கள் உள்ளதா என்று வேறு கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+