திண்டுக்கல் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்.. பெண் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு நால்ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தவர் மகேஸ்வரி (35). அவரது கணவர் சுப்பிரமணி. இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார்.

இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் இறந்ததால் போட்டோ ஸ்டூடியோ வைத்து குழந்தைகளை வளர்த்து வந்த மகேஸ்வரி இன்று இரு சக்கர வாகனத்தில் சாலையூர் நால்ரோட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியதில் மகேஸ்வரிக்கு தலையில் அடிப்பட்டது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரி, மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் சொந்த ஊரான சுள்ளெறும்பு நடுப்பட்டிக்கு கொண்டுவரப்படுகிறது.
ஏற்கெனவே தந்தையை இழந்த இரு குழந்தைகளும் தற்போது தாயையும் இழந்து தவித்து வருவது சுள்ளெரும்பு நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications