செல்ஃபி மோகம்! புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மாயமான இளைஞர்.. பாறைகளுக்கிடையே அழுகிய நிலையில் மீட்பு
திண்டுக்கல்: செல்பி மோகத்தால் திண்டுக்கல் மாவட்டம் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் ஒரு வாரம் கழித்து சடலமாக மீட்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. அவருடைய மகன் அஜய் பாண்டியன் (28). இவர் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி அன்று ராமநாதபுரம் சத்திரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (25), அஜய் பாண்டியனை பார்க்க மங்களம்கொம்பு பகுதிக்கு வந்திருந்தார்.

ஆடி பெருக்கு
இந்த நிலையில் நேற்று முன் தினம் ஆடி பெருக்கு அதாவது ஆடி 18-ஐ யொட்டி இவர்கள் 2 பேரும் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் புல்லாவெளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அஜய் பாண்டியன்
இதை பார்த்த அஜய் பாண்டியன் இதை ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். இதற்காக அஜய் பாண்டியன் நீர் வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் நின்று போஸ் கொடுக்க அதை கல்யாண சுந்தரம் வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து ஒவ்வொரு பாறையாக இறங்கி கைகளை மேலே உயர்த்தி அஜய் போஸ் கொடுத்து வந்தார்.

ஈரமான பாறை
ஒரு கட்டத்தில் ஈரமான பாறையில் நின்றாக அப்போது ஒரு காலை இன்னொரு கால் மேல் லேசாக மடக்கி நின்றது போல் கைகளை தூக்கி போஸ் கொடுத்தார். உடனே அஜய் பாண்டியனால் பேலன்ஸ் செய்ய முடியாததால் பாறையில் இருந்து விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிக்குள் தவறி விழுந்தார்.

வீடியோ எடுத்த நண்பர்
வீடியோ எடுத்த நண்பர் பதறி அடித்துக் கொண்டு அய்யோ டேய் மச்சான் என அலறினார். பின்னர் உடனே ஊர் மக்களிடமும் போலீஸாரிடமும் நடந்தவற்றை கூறினார். அஜய் பாண்டியனின் நிலை என்னவானது என தெரியவில்லை. தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் திண்டுக்கல் மாவட்ட போலீஸார் தேடி வந்தனர்.

தீயணைப்பு துறையினர்
திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தீயணைப்பு துறையினர் இளைஞரை தேடி வந்தனர். தண்ணீரின் வரத்து அதிகரிப்பு, அதிக ஆழம் உள்ளிட்டவைகளால் தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு வார கால தேடலுக்குப் பிறகு புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மாயமான இளைஞரின் உடல் மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் பாறைகளுக்கு இடையே அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications