உடன் பிறப்பே.. தீபாவளிக்கு வாங்கித்தரும் ஒரு பரிசு.. ஆயுள் ஆரோக்கியம் கூடும்.. தலைமுறையை வாழ வைக்கும்!
சென்னை: உறவுகளும் சொந்தங்களும் கூடி கொண்டாடும் பண்டிகை தீபாவளி.. இந்த பண்டிகை நாட்களில் நாம் நம்முடன் பிறந்தவர்களுக்கு அளிக்கும் பரிசு நம்முடைய வாழ்க்கையை வளமாக்கும். நம்முடைய ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். தலைமுறையையும் வாழ வைக்கும் என்பது ஐதீகம்.
தீபாவளிப் பண்டிகையின் ஐந்தாம் நாள் யம துவிதியை ஆக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரர்கள் சகோதரியின் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டு விட்டு அவர்களுக்கு பரிசளித்து விட்டு வருவார்கள். சகோதரப் பாசத்தை வளர்க்கும் விழாவாக யம துவிதியை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை ஒரு நாளுடன் முடிந்து விடுகிறது.

தமிழ்நாட்டில் திருமணமாகி புகுந்த வீடு சென்ற பெண்களுக்கு பொங்கல்சீர் கொடுக்கும் வழக்கம் உள்ளது. அதே போல பண்டிகை நாட்களில் புத்தாடைகள் எடுத்து கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. தீபாவளி நாளில் காலையில் குல தெய்வ பூஜை செய்வது தமிழ்நாட்டில் வழக்கமாக உள்ளது. அப்போது வைத்து படைக்கப்படும் சேலை அல்லது ஆடையை நம் வீட்டில் பிறந்த பெண்கள் அணிந்து கொள்ள அளிக்கின்றனர்.
வசதி படைத்த சிலரோ புத்தாடைகளும், பலகாரங்களும் வாங்கி கொடுத்து வாழ்த்தி விட்டு வருவார்கள். ஆடைகள் வாங்கித்தர வசதியில்லாதவர்கள் தீபாவளி நாளில் இனிப்புகளையும் பட்டாசுகளையும் தங்களின் உடன் பிறப்புகளுக்கு கொடுத்து விட்டு வாழ்த்தி விட்டு வருவார்கள். கறி சோறு சாப்பிட அழைத்து விட்டும் வருவார்கள். அண்ணன் தம்பிகள் வீட்டிற்கு போவதென்றால் பெண்களுக்கு அப்படி ஒரு அலாதியான சுகம். தங்களால் முடிந்த அளவிற்கு சகோதரர்களின் குடும்பத்தினரை பரிசோடு பார்க்க செல்வார்கள்.
தங்களுடன் பிறந்த சகோதரிகளை நாம் நன்றாக கவனித்துக்கொண்டால் அவர்களின் வாழ்த்து எப்போதும் கிடைக்கும். அதே போல சகோதரிகளின் வாழ்த்து சகோதரர்களின் குடும்பத்தை மகிழ்ச்சியோடு வாழ வைக்கும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. எனவேதான் நாடு முழுவதும் சகோதரர்களுக்காக பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தன் எனப்படும் ராக்கி திருவிழா போல தீபாவளியும் தற்போது சகோதர சகோதரிகளை வாழ்த்தும் விழாவாக மாறி வருகிறது.
இன்றைய தலைமுறையினர் மறக்காமல் தீபாவளி திருநாளில் சில பரிசு பொருட்களை வாங்கித்தரலாம். பெண்களுக்கு புடவை ரவிக்கை, மஞ்சள் குங்குமம் வாங்கி கொடுப்பதன் மூலம் சகோதரிகளின் வாழ்த்து கிடைக்கும். புடவை வாங்கித்தர வசதியில்லாதவர்கள் வெற்றிலை, மஞ்சள் குங்குமம் வைத்து பழங்கள் வைத்து கொடுக்கலாம். இதன் மூலம் சகோதரர்களின் செல்வ வளம் பெருகும். அது போல பெண்கள் தங்களின் சகோதரர்களுக்கு வேஷ்டி சட்டை எடுத்து கொடுக்கலாம். எது எதற்கோ எத்தனையோ செலவு செய்கிறோம். தங்களின் உடன் பிறந்தவர்களுக்கு பண்டிகை நாட்களில் இது போன்ற பரிசு கொடுப்பது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
இதற்கு புராண ரீதியாக கதை ஒன்று உள்ளது. ஐப்பசி மாத துவிதியை அன்று எமன் தன் சகோதரியான யமுனையின் வீட்டிற்குச் சென்றார். யமனின் சகோதரியும், தன் சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து மலர்மாலை சூட்டி, நெற்றியில் திலகம் இட்டு அன்புடன் வரவேற்று உபசரித்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து இனிப்பு உண்டு, தங்கள் சகோதரப் பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள்.
தன் சகோதரியின் கையினால் நெற்றியில் திகலமிட்டுக் கொண்ட நாள் எமனுக்குப் பிடித்தமான நாளானது.இந்த நாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார்களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன் என்று வரம் கொடுத்தாராம் யமன். இதன் அடிப்படையில் தான் வடநாட்டில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் வீட்டிற்குச் சென்று,அண்ணன்- தம்பி ஆகியோருக்கு நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவார்கள்.
சகோதரப் பாசத்தை வளர்க்கும் விழாவாக இது திகழ்கிறது. இந்தப் புராணக்கதையின் அடிப்படையில் தான் வடநாட்டில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். அண்ணன்- தம்பி ஆகியோருக்கு நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவார்கள். தமிழ்நாட்டிலும் இது போல தீபாவளியை பாச திருவிழாவாக மாற்றலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications