அமீரகத்தில் அடித்த அதிர்ஷ்டம்.. ஒரே நாளில் 45 கோடி ரூபாய்க்கு அதிபதியான இந்தியர்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி வாங்கிய இந்தியருக்கு ரூ.45 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜூ என்பவருக்கு 20,000,000 திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜேராவில் கேரளாவைச் சேர்ந்த 39 வயதாகும் ஸ்ரீஜு கடந்த 11 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அங்குள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் ஆப்ரேட்டராக வேலை செய்கிறார். இவருக்கு இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளன.

இவருக்கு சமீபத்தில் அமீரகத்தில் உள்ள தனியார் நிறுவனம் நடத்திய அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் 2 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.45 கோடி) பரிசு விழுந்துள்ளது. இதை கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார் ஸ்ரீஜு.
லாட்டரியை பொறுத்தவரை யாராவது ஒருவருக்கு மட்டுமே அதிர்ஷ்டம் அடிக்கும். குடிசையில் இருப்பவரை கோபுரத்திற்கு அழைத்து செல்லும், ஆனால் பெரும்பாலும் மக்களை வறுமையில் அதிர்ஷ்டத்தை மட்டும் பணத்தையும் லாட்டரியில் தொலைப்பது நடக்கும். யாராவது ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகும் சம்பவம் அதிசயமாக நடப்பதும் உண்டு.
அப்படித்தான் கேரளாவைச் சேர்ந்த 39 வயதாகும் ஸ்ரீஜுக்கு அதிர்ஷ்டம் கொட்டி உள்ளது. இந்தியாவில் அல்ல, அமீரகத்தில் நடந்துள்ளது. அண்மைக்காலமாக அமீரகத்தில் தொடர்ந்து இந்தியர்கள் அதிக அளவில் லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல்களில் பங்கேற்று பரிசுகளை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று 154வது 'மஹ்ஸூஸ் சாட்டர்டே மில்லியன்ஸ்' அதிர்ஷ்டச்சீட்டுக் குலுக்கலில் ஸ்ரீஜுக்கு 45 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. வேலை செய்து கொண்டிருந்த ஸ்ரீஜு தனக்கு கிடைத்த பரிசு தொகையை பற்றி கேள்விப்பட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "காரில் ஏறி அமர்ந்த நான், அதை இயக்குவதற்கு முன் எனது மஹ்ஸூஸ் கணக்கைப் பார்த்தேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. எனக்குப் பரிசு விழுந்திருப்பதைக் கண்டேன். ஒரு நிமிடம் என்ன செய்வதெனத் தெரியாமல் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனேன். நான் வென்றது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதிகாரபூர்வ தொலைபேசி அழைப்பு வரும்வரை காத்திருந்தேன். பணம் வந்தது உறுதியானது. இந்த பரிசுப்பணத்தைக் கொண்டு, இந்தியாவில் ஒரு வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளேன் " இவ்வாறு கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications