நடிகர் அஜித் குமாருக்கு ஷாக்.. ஏகே ரேஸிங் அணியின் கார் தீப்பற்றி எரிந்தது.. டிரைவர் நிலைமை என்ன?
துபாய்: துபாயில் இன்று 24 மணிநேர கார் பந்தயப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணி பங்கேற்றுள்ளது. இந்நிலையில் தான் அஜித் குமாரின் அணியின் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சேர்ந்த ரேசர் அயர்டன் ரொடான்ட் உயிர் தப்பினார்.
நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேசிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அவர் தனி அணியை உருவாக்கி உள்ளார். ‛அஜித் குமார் ரேசிங்' என்ற பெயரில் அந்த அணி செயல்பட்டு வருகிறது. இந்த அணி துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்று உள்ளது.

துபாயில் உலகத்தரம் வாய்ந்த 'துபாய் 24 ஹவர்ஸ்' (Dubai 24 Hours) கார் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜித் குமாரின் அணி பெல்ஜியத்தைச் சேர்ந்த ரெட் ஆண்ட் ரேசிங் என்ற மோட்டார்ஸ்போர்ட் அணியுடன் சேர்ந்து பங்கேற்றுள்ளது.
துபாயில் இன்று தொடங்கிய 24 மணிநேர கார் பந்தய போட்டியில் அஜித் குமாரின் அணி சார்பில் 4 பேர் பங்கேற்றனர். கோப் டி ப்ரூக்கர், அயர்டன் ரெடான்ட், யானிக் ரெடான்ட் ம்றம் ரோமெய்ன் வோஸ்னியாக் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தா்ன அயர்டன் ரெடான்ட் ஓட்டி சென்ற கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்து புகை வெளியேறியது.
இதையடுத்து அயர்டன் ரெடான்ட் காரில் இருந்து உடனடியாக வெளியேறினார். இதில் அதிர்ஷ்டவசமாக அயர்டன் ரெடான்ட் உயிர் தப்பினார். மேலும் காரில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. ஆனாலும் கார் சேதமடைந்தது. இன்ஜினில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கார் தீப்பற்றி எரிந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை தொடங்கி உள்ளது. இந்த சம்பவம் துபாய் கார் ரேசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது அணியை உற்சாகப்படுத்தி நடிகை நயன்நாதா, அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன், நடிகர் சிபி ராஜ், இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டவர்கள் துபாய் சென்றனர்.
அவர்கள் நடிகர் அஜித் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் ஏராளமானவர்கள் கார் ரேஸை பார்க்க குவிந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
