சூட்டோடு சூடாக.. ரோஹித் பிளான்.. கோலிக்கு கிடைத்த செம வாய்ப்பு.. இன்று மட்டும் அது நடந்தால்.. மாஸ்!
துபாய்: இந்தியா ஹாங்காங் இடையிலான ஆசிய கோப்பை டி 20 ஆட்டம் இன்று துபாயில் நடக்க உள்ளது. இந்த போட்டி முக்கியமான சில விஷயங்களுக்காக கவனம் பெற்றுள்ளது.
2022 ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் அணியாக ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 பிரிவிற்கு முன்னேறி உள்ளது. இன்னொரு பக்கம் முதல் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தி உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை 2022 தொடர் ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி ஓவர் வரை திக் திக் என்று திரில்லாக சென்ற இந்த ஆட்டத்தில் பாண்டியாவின் கூல் பினிஷிங் காரணமாக இந்தியா வெற்றியை வசப்படுத்தியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரன்கள் எடுத்து 19.5 ஓவரில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் கோலி 35, ஜடேஜா 35, ஹர்திக் பாண்டியா 33 என்று அதிரடியாக ரன்களை குவிக்க.. இந்திய அணி 19.4 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தியா
பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இன்று ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. ஹாங்காங் அணி கடைசி நேரத்தில் கஷ்டப்பட்டு இந்த தொடருக்குள் வந்தது. இன்று ஹாங்காங் அணியை வீழ்த்துவது இந்திய அணிக்கு மிகவும் சுலபமான விஷயம்தான். ஆனாலும் சமயங்களில் சில கத்துக்குட்டி அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தி இது போன்ற கோப்பை தொடர்ச்சிகளில் அதிர்ச்சி கொடுக்கும். எதிர்பார்க்காத குட்டி அணிகள் இந்தியா போன்ற வலிமையான அணிகளை வீழ்த்தும்.

ஹாங்காங்
இதன் காரணமாக இந்திய அணி இன்று மிகவும் கவனமாக ஆட வேண்டும். கடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடியதால் இன்றைய போட்டியில் அணியில் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை. இருந்தாலும் வேறு சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ரோஹித் சர்மா பிளான் போடும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக பண்டை மீண்டும் அணிக்குள் கொண்டு வரலாம். அல்லது தினேஷ் கார்த்திக்கோடு விளையாடும் வாய்ப்புகளும் உள்ளன.

ராகுல்
கே.எல் ராகுல் பார்மில் இல்லாத நிலையில் இன்று அவர் பார்மிற்கு திரும்ப நல்ல வாய்ப்பு உள்ளது. இன்னொரு பக்கம் ஹாங்காங் அணிக்கு 4 பாஸ்ட் பவுலர்கள் அவசியம் இல்லை. இதனால் இன்று ஆவேஷ் கானுக்கு ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதற்கு பதிலாக அஸ்வின் அணிக்குள் வரும் வாய்ப்புகளும் உள்ளன. அதாவது சாஹல், ஜடேஜா, அஸ்வின் என்று மூன்று ஸ்பின் பவுலர்கள், பாண்டியா, புவனேஷ்வர், அர்ஷிதீப் என்று 3 பாஸிவ் பவுலர்கள் ஆடும் வாய்ப்புகள் உள்ளன.

கோலி
இன்று கோலிக்கு முக்கியமான நாள் ஆகும். கோலி சமீப காலமாக சிறிய அணிகளுடன் ஆடவே இல்லை. இன்றைய போட்டியில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு வந்தால் அவர் கண்டிப்பாக பார்மிற்கு திரும்பலாம். கடந்த போட்டியில் கோலியிடம் பழைய ஆக்ரோஷம் கொஞ்சம் இருந்தது. இன்று அதே ஆக்ரோஷத்தோடு கோலி ஆடும் பட்சத்தில் அவர் மீண்டும் பார்மிற்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தானோடு வென்ற சூட்டோடு சூடாக இன்றும் வென்று சூப்பர் 4 ஆட்டத்திற்கு முன்னேற இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications