அதிகாலை 5 வரை என்ன நடந்தது? கோபத்தில் சீறிய ரோஹித்.. கூலாக மறுத்த கோலி.. அர்ஷ்தீப் செய்த தப்பு என்ன?
துபாய்: நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் வீரர் அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்டது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நேற்று டாஸ் வென்று பாகிஸ்தான் பவுலிங் செய்தது. இதையடுத்து முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
அதன்பின் இறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் ஒரு பால் மீதம் இருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

ரவி பிஸ்னோய்
இந்த போட்டியில் கடைசி 3 ஓவர்களில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்தது. 18வது ஓவரை ரவி பிஸ்னோய் வீசினார். அப்போது 34 ரன்கள் பாகிஸ்தானின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆஷிப் அலி ஸ்டிரைக்கில் இருந்தார். குஷ்தில் ஷா நான் ஸ்டிரைக்கர் எண்டில் இருந்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் ஆசிப் அலி பந்தை ஸ்வீப் செய்து பரக்கத் விட்டார். அப்போது அர்ஷ்தீப் சிங் கைக்கு அழகாக கேட்ச் சென்றது.

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங் இதை கையில் வாங்கினார். ஆனால் பந்தை சரியாக பிடிக்காமல் நழுவவிட்டார். இதனால் ஆசிப் அலி களத்திலேயே இருந்தார். அவர் முக்கியமான வீரர் என்பதால், அந்த கேட்சை விட்டது பெரிய சர்ச்சையானது. நெட்டிசன்கள் பலரும் அர்ஷ்தீப் சிங்கை இதற்காக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரின் அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்,

ஹர்பஜன் சிங்
அவர் இளம் வீரர், பிரஷரில் கேட்சை விட்டு இருப்பார். அவர் செய்த தவறு என்ன. ஏன் அவரை இப்படி விமர்சனம் செய்கிறார்கள் என்றும் சிலர் அவருக்கு ஆதரவாக பேசி உள்ளனர். ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள், அர்ஷ்தீப் சிங் அவசரத்தில் விட்டுவிட்டார். மைதானத்தில் தவறு செய்யாத ஆட்களே இருக்க முடியாது. யாரும் வேண்டும் என்றே கேட்ச் விட மாட்டார்கள். அவரை போய் விமர்சனம் செய்ய வேண்டாம், என்று ஆதரவாக பேசி உள்ளார்.

கேட்ச் விட்டார்
நேற்று போட்டியில் அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்டதும் அது பெரிய சர்ச்சையானது. ரோஹித் சர்மா உடனே கோபம் அடைந்தார். ஆ ஆ ஆ என்று வாயை பிளந்து கோபமாக கத்தினார். அர்ஷ்தீப் சிங் முகத்தை பார்த்து கோபமாக ரியாக்சன் கொடுத்தார். இதனால் ஒரு நிமிடம் அர்ஷ்தீப் சிங் அப்படியே உடைந்து போனார். அவரின் கான்பிடன்ஸ் இதனால் மொத்தமாக சரிந்தது. அதற்கு அடுத்த ஓவரில் அவர் இதனால் வைட் பந்துகளை வீசினார்.

முன்னாள் கேப்டன்
ஆனால் முன்னாள் கேப்டன் கோலி இந்த விவகாரத்தை மிகவும் கூலாக அணுகி உள்ளார். அதில், யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள். நானும் தப்பு செய்து இருக்கிறேன். அந்த மேட்ச் மிகவும் டைட்டாக சென்றது. எல்லோரும் டென்ஷனாக இருந்தார்கள். இது ஹை பிரஷர் ஆட்டம். அதனால் தவறுகள் நடக்கவே செய்யும். இதை விமர்சிக்க கூடாது.

ஆதரவு
நான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முதல்முறை பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய போது தவறான ஷாட் அடித்து அவுட் ஆனேன். உங்களுக்கு மறுநாள் அதிகாலை 5 மணி வரை என்ன நடந்தது என்று தெரியுமா? நான் என் ரூமிலேயே விட்டத்தை பார்த்தபடி இருந்தேன். என்னால் தூங்கவே முடியவில்லை. என்னுடைய கெரியரே ஓவர் என்று நினைத்தேன். இதை பற்றி எல்லாம் பெரிதாக பேச கூடாது, என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications