அவரை உட்கார வைக்கணும்! ரோஹித்துக்கு கடைசி நேரத்தில் பெரிய சிக்கல்.. பாக். மேட்சில் என்ன நடக்குமோ?

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்க போகும் இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆசிய கோப்பை தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று துபாயில் நடைபெறுகிறது. இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இன்றைய மேட்ச் பார்க்கப்படுகிறது. கடந்த முறை உலகக் கோப்பை டி 20 தொடரில் பாகிஸ்தானுடன் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்திய அணிக்கு மிகப்பெரிய தோல்வியாக அது பார்க்கப்பட்டது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா வென்றாலும்.. இப்போது ஆசிய கோப்பையில் அப்படி ஒரு தோல்வியை எதிர்கொள்ள கூடாது என்பதில் இந்திய அணி உறுதியாக உள்ளது.

இந்தியா

இந்தியா

இந்திய வீரர்கள் கிட்டத்தட்ட எல்லோரும் துபாய் பிட்சில் அதிகம் விளையாடி இருக்கிறார்கள். ஐபிஎல் தொடர்களை இரண்டு சீசன் இங்கேதான் இந்திய வீரர்கள் ஆடினார்கள். இதனால் இந்த பிட்ச், இங்கு நிலவும் காலநிலை இந்திய வீரர்களுக்கு அதிக பழக்கம் கொண்டது. இன்னொரு பக்கம் யுஏஇயை பாகிஸ்தான் சர்வதேச போட்டிகளுக்கு பயன்படுத்தி வருவதால் அவர்களுக்கும் இந்த பிட்ச் பழக்கமான ஒன்றாகவே இருக்கும். இதனால் இன்றைய மேட்ச் விறுவிறுப்பாக இருக்கும்.

துபாய்

துபாய்

பொதுவாக துபாய் பிட்சில் வானிலை ஆட்டத்தை மாற்றும். அதாவது 8 மணிக்கு பின்பாக வரும் பனி அங்கு மைதானத்தை ஈரமாக்கும். இதனால் பந்து ஈரமாகி பவுலிங் செய்ய கஷ்டமாகும். இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளுக்கு எப்போதும் சாதகமான சூழ்நிலை நிலவும். சேசிங் செய்வது மிக எளிதாக இருக்கும். இதன் காரணமாக துபாய் பிட்சில் பொதுவாக டாஸ் வெல்லும் அணி இரண்டாவது பேட்டிங் செய்யவே விரும்பும்.

 உலகக் கோப்பை

உலகக் கோப்பை

2021 உலகக் கோப்பைக்கு பின் இந்தியா பல்வேறு அணிகளை டி 20 போட்டிகளில் எதிர்கொண்டது. இதில் 16 போட்டிகளில் இந்தியா 12ல் வென்றது. 4ல் தோல்வி. அதில் ஒன்றில் மட்டுமே சேஸிங்கில் தோல்வி அடைந்தது. ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் 8 வெற்றி, 5 தோல்வி என்ற ரெக்கார்டை இந்தியா கொண்டுள்ளது. கடந்த 2010ல் இருந்து 6ல் 5 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வென்றுள்ளது.

யார் ஆடுவார்?

யார் ஆடுவார்?

இன்று இந்திய அணியில் ஆட போவது யார் என்பதுதான் கேள்வியாக உள்ளது. தினேஷ் கார்த்திக் சிறப்பாக பினிஷ் செய்து வருகிறார். ஆனால் அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. சூர்ய குமார் யாதவ் மிடில் ஆர்டரில் இருப்பதால்.. ரோஹித் யாரை உட்கார வைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோஹித்துக்கு இது மிகப்பெரிய பிரஷராக இருக்க போகிறது.

சூர்யா குமார் யாதவ்

சூர்யா குமார் யாதவ்

சூர்யா குமார் யாதவை உட்கார வைத்தால் மிடில் ஆர்டர் கொஞ்சம் வலிமை இழக்கும். கே. எல் ராகுல் வேறு வந்துவிட்டதால் தினேஷ் கார்த்திக் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. எப்படியும் பண்ட் இல்லாமல் இந்திய அணி களமிறங்க வாய்ப்பு இல்லை. பாண்டியா சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அதனால் அவரையும் உட்கார வைக்க முடியாது. இதனால் இன்று இந்திய அணியில் பெரும்பாலும் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோர் ஆட வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியில் ஷகீப் அப்ரிடி இல்லை என்பது ஒரு விதத்தில் நல்ல செய்தி. இருந்தாலும் இந்திய அணிக்கு மற்ற பாகிஸ்தான் பவுலர்கள் சவாலாக இருப்பார்கள். முக்கியமாக பேட்டிங்கில் பாபர், ரிஸ்வான் இருவரும் சவாலாக இருப்பார்கள். இன்று பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், பாபர் ஆஸம், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, முகமது ஹஸ்னைன், ஷதாப் கான், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா/ஷாநவாஸ் தஹானி ஆகியோர் ஆட வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+