குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் பலி! உயிரிழந்தோர் விவரத்தை வெளியிட்ட மத்திய அரசு
குவைத்: குவைத் தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் பெயர், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்குக் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வேலை செய்து வரும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சம்பளம் அதிகம், வேலை நிச்சயம் உள்ளிட்ட காரணங்களால் இவர்கள் அதிகளவில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக குவைத் இருக்கிறது. பல லட்சம் இந்தியர்கள் குவைத் நாட்டில் தங்கி பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர்.
அதன்படி குவைத்தின் மங்காப் நகரில் இந்தியர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். இதுபோல வேலை செய்ய வரும் வெளிநாட்டினர் தங்கவே அங்குப் பிரதான குடியிருப்புகளும் உள்ளன. அப்படி அங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தான் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கேரளாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து குவைத் மங்காப் நகருக்கு வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள் அங்குத் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவெனப் பரவியிருக்கிறது.
இந்த விபத்தில் இதுவரை சுமார் 50 உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலருக்கும் தீ காயம் மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தீ விபத்தில் இந்தியர்கள் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதை மத்திய அரசு இப்போது உறுதி செய்துள்ளது. மேலும், அவர்களின் விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உயிரிழந்தோரின் பெயர், பாஸ்போர்ட் விவரம், சிவில் ஐடி நம்பர். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இவர்களில் பெரும்பாலானோர் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். மேலும், உபி, பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும் இதில் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள உயிரிழந்தோர் விவரம்:


-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications