துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசுக்கு துபாய் தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி... கொரோனா தடுப்பு பணிக்கு மனமுவந்து வழங்கல்!

Google Oneindia Tamil News

துபாய்: தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்கு துபாய் தொழிலதிபர் ஜாஹிர் ஹுசேன் என்பவர் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை குறைப்பத்தற்கான ஆகச்சிறந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மே 7-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றது முதல் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதில் மட்டுமே தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கொரோனாவை ஒழிக்கும் பணியில் அரசுடன் கரம்கோர்த்த தொழிலதிபர்கள் பலரும் தங்களது வசதிக்கேற்ப நிதி உதவி செய்து வருகின்றனர்.

Dubai businessman give 10 lakh to Tn govt for corona relief fund

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரை பூர்வீகமாக கொண்ட ஜாஹிர் உசேன் என்ற தொழிலதிபர் தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் நிதி அளித்திருக்கிறார். தற்போது இவர் துபாயில் வசித்து வந்தாலும் கூட தாய் மண்ணான தமிழகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற நோக்கில் இந்த நிதியை காசோலை மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

Dubai businessman give 10 lakh to Tn govt for corona relief fund

இதனிடையே ஐக்கிய அரபு அமீரக திமுக செயலாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான், தொழிலபதிர் ஜாஹீர் உசேனுக்கு நன்றி தெரிவித்ததுடன் திமுக அயலக அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கவனத்திற்கும் இதை கொண்டு சென்றார். இதையடுத்து துபாய் தொழிலதிபர் ஜாஹிர் உசேனை அலைபேசி மூலம் தொடர்புகொண்ட டி.ஆர்.பி.ராஜா அவருக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Dubai businessman give 10 lakh to Tn govt for corona relief fund
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X