சாதாரண தூக்க மாத்திரைதான்.. துபாய் போலீசில் எக்குத்தப்பாக சிக்கிய இளம்பெண்! இந்தியர்களே உஷார்
துபாய்: வேலை வாய்ப்புக்காக, துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆசியாவை சேர்ந்த பெண் ஒருவர், சாதாரண தூக்க மாத்திரையை அதிக அளவில் வைத்திருந்ததால் துபாய் போலீசில் சிக்கியிருக்கிறார். இந்த சம்பவம் இந்தியர்களுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
22 வயது பெண்ணை துபாய் போலீசார் சமீபத்தில் கைது செய்திருந்தனர். போதைப்பொருள் பயன்படுத்தினார் என்பதுதான் வழக்கு. அதாவது இந்த பெண் மனோவியல் மருந்துகளை அளவுக்கு அதிகமான பயன்படுத்தினார் என்று போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாத்திரையில் இவ்வளவு விஷயமா?
மனோவியல் மருந்துகள் என்பது ஒருவகையான தூக்க மாத்திரைகளாகும். மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த மாத்திரைகளை பயன்படுத்துவது சட்ட விரோதம். அதைவிட முக்கியமான விஷயம் இந்த மருந்துகள் உயிருக்கே ஆபத்தானவையாக அமைந்துவிடும். ஏனெனில் இந்த மனோவியல் மருந்துகள், மூளையில் செரோடோன் மற்றும் டோபமைன் போன்ற வேதிப்பொருட்கள் சமநிலையை இழக்கும்போது, அதை சரி செய்ய கொடுக்கப்படுகிறது.
துபாயில் சட்ட விரோதம்
செரோடோன் என்பது மகிழ்ச்சியை தூண்டும் வேதிப்பொருள். அதேபோல டொபமைன் என்பது உற்சாகத்தை கொடுக்கும் ஹார்மோன். இதற்காக கொடுக்கப்படும் மருந்துகளை கூடுதலாக, சுயமாக மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்வதால் தற்கொலை போன்ற சிந்தனைகள் கூட ஏற்படும். எனவே, துபாயில் இந்த மருந்துகளை உரிய மருந்து சீட்டு இல்லாமல் வைத்திருப்பது குற்றமாகும்.
இளம்பெண் கைது
அப்படித்தான் மருந்துகளை இளம்பெண் வைத்திருந்திருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் கிடைத்த நிலையில், போலீசார் அந்த இளம்பெண்ணை ரகசியமாக கண்காணித்தனர். இந்த சோதனையில் மாத்திரைகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியர்களே உஷார்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இளம்பெண் மாத்திரைகளை வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு ரூ.1.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் சாதாரண தூக்க மாத்திரைகளை கூட, உரிய மருந்து சீட்டு இல்லாமல் வைத்திருப்பது சட்ட விரோதம். இந்த குற்றத்திற்கு அபராதம் தொடங்கி, சிறை தண்டனை அல்லது நாடு கடத்தல் தண்டனை கூட விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே வேலைக்காக இந்த துபாய் செல்லும் இந்தியர்கள் உஷாராக இருப்பது முக்கியம்.
இந்தியரா?
இதில் இன்னொரு விஷயம் என்னவெனில், துபாய் போலீசார், தனி மனித உரிமையை கவனமாக பராமரிப்பார்கள். இந்த வழக்கில் சிக்கியவர் இந்தியரா? பாகிஸ்தானியரா? என்பதை அவர்கள் சொல்லவில்லை. ஆசிய பெண் என்று மட்டுமே கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications