Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாய்னா துபாய் தான்.. வாரத்துல 4 நாள் வேலை.. 3 நாள் லீவ்.. அரசு ஊழியர்களுக்கு சம்மர் பரிசு

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்தியாவில் கோடை காலம் முடிந்து பருவமழை காலம் தொடங்கிவிட்டது. துபாயில் இப்போதுதான் கோடை காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடும்பம், வேலை ஆகிய இரண்டையும் சமநிலையில் வைத்துக் கொள்வதற்காக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்ற முறையை அமல்படுத்தியுள்ளனர்.

பொதுவாக துபாயில் ஜூன் - செப்டம்பர் காலம் கோடை காலமாகும். அந்த வகையில் 2025 வருடத்துக்கான கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடை காலம் என்றாலே குழந்தைகளுக்கு குஷியான காலம். ஆனால் பணிக்கு செல்லும் பெற்றோருக்கு அது எளிதானதல்ல. குழந்தைகள், வேலை இரண்டையும் கையாள்வது சற்று கடினமே.

dubai-government-announced-4-days-work-3-days-leaeve-for-government-employees

அதை உணர்ந்து துபாய் அரசு அவர்களின் அரசு ஊழியர்களுக்கு அசத்தலான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து துபாய் அரசு மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோடை காலத்தில் ஊழியர்கள் தங்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் பணியை சரி சமமாக கையாள வழிவகுக்கும் வகையில் பணி நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.

அதன்படி ஊழியர்கள் குரூப் 1, குரூப் 2 என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளனர். குரூப் 1 பிரிவில் இருக்கும் ஊழியர்கள் வாரத்தில் திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினசரி சுமார் 8 மணி நேரம் பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறையாகும்.

குரூப் 2 பிரிவில் உள்ள ஊழியர்கள் திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினசரி 7 மணி நேரம் பணியாற்ற வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமை அரை நாள் மட்டும் (4.5 மணி நேரம்) பணியாற்றலாம். அவர்களுக்கு வெள்ளி அரை நாள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று வாரத்தில் மொத்தம் 2.5 நாட்கள் விடுமுறை." என்று கூறியுள்ளனர்.

"ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை இந்த முறை அமலில் இருக்கும். அந்தந்த அரசுத்துறைகள் தங்களின் விருப்பத்தின்படி இதை செயல்படுத்திக் கொள்ளலாம்." என்றும் துபாய் அரசு மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் குடும்பம் - வேலை ஆகிய இரண்டையும் சமாளிக்க முடியும் என்று நம்புகின்றனர்.

முன்னதாக துபாய் அரசு கடந்த 2024 கோடை காலத்திலேயே இதற்கான முயற்சிகளில் இறங்கியது. அப்போது சோதனை அடிப்படையில் 21 அரசுத்துறைகளுக்கு ஆகஸ்ட் - செப்டம்பர் காலத்தில் வாரத்தில் 4 நாட்கள் பணிமுறை செயல்படுத்தினர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஊழியர்கள் உற்சாகமாக பணியாற்றியதால் உற்பத்தியும் அதிகரித்து, திறன் மேம்பாடு நன்கு உயர்ந்ததாக கூறுகிறார்கள்.

அந்த முடிவின் அடிப்படையில் தான் இந்த வருடம் தற்போது அனைத்துத் துறைகளிலும் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற முறை அமலாகவுள்ளது. இதற்கு துபாய் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். துபாய் அரசு தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

கோடை காலம் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் கட்டுமானப் பணியாளர்களின் பணி நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. உச்சி வெயில் நேரமான 12-3 நேரடியாக சூரிய வெளிச்சம்படும் வேலைக்கு இடைவெளி விட வேண்டும் என்று அறிவித்துள்ளனர். இதை நேரடியாக ஆய்வு செய்து அந்த விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+