துபாய்க்கு வேலை தேடி போறீங்களா? இந்தியர்களே உஷார்.. இந்த தவறு மட்டும் செய்யாதீங்க!

Subscribe to Oneindia Tamil

துபாய்: வேலை தேடி வருபவர்கள் அல்லது ஏற்கெனவே வேலை செய்துக்கொண்டு துபாயில் தங்கியிருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு, துபாய் போலீசார் முக்கிய எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது போலி விசா மூலம் துபாய்க்கு வெளிநாட்டினர் அதிக அளவில் வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த மோசடியில் சிக்கி கொள்ளாதீர்கள் என்று துபாய் போலீஸ் எச்சரித்துள்ளது.

visa job jobs

துபாய் குற்றப்பிரிவு விசாரணை துறையின் கீழ் இயங்கும், மோசடி தடுப்பு மையம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மோசடியாளர்கள் எந்தெந்த வழிகளில் வேலை தேடுபவர்களை ஏமாற்றுகிறார்கள் என்று இந்த மையம் விவரித்து இருக்கிறது.

சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாத போலி வேலை வாய்ப்புகளை இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் கூறுவார்கள். அதேபோல விசா ஸ்பான்சர்ஷிப் தருவதாக கூறி, பணம் பறிப்பது, சட்ட நடைமுறைக்கு புறம்பாக விசா கேரண்டி என்று ஆசை காட்டுவது, இதெல்லாம் மோசடியாளர்கள் பின்பற்றும் வழிமுறைகளாக இருக்கிறது என்று மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த மோசடிகளிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளையும் துபாய் காவல்துறை வழங்கி உள்ளது. அதாவது, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு முகமைகள் மூலம் மட்டுமே விசா விண்ணப்பங்களை செய்ய வேண்டும். பணம் செலுத்துவதற்கு முன், வழங்கப்பட்ட விசா சலுகை உண்மையானதா? என்பதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் சரி பார்க்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களிடமோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற குழுக்களிடமும் முன்பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மோசடி அல்லது சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் அல்லது இது தொடர்பாக சந்தேகம் இருந்தால், துபாய் போலீஸ் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் செல்போனில் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். E crime platform என்கிற ஆன்லைன் தளத்திலும் மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். இது தவிர 901 என்ற எண்கள் மூலமாகவும் ஆலோசனை பெறலாம் என்று தெரிவித்திருக்கிறது.

துபாய் காவல் துறையின் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம், வேலை தேடுபவர்கள் தவறான இடங்களில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக புகார் அளிப்பதே இந்த மோசடிகளை தவிர்ப்பதற்கான செயல்முறை என்று துபாய் போலீஸ் கூறியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+