கப்பல்கள் மொத்தமாக முடங்குது! அமீரகத்தில் இந்திய எண்ணெய் நிறுவனம் மீது அட்டாக்! பெரிய சிக்கல்
துபாய்: உலகின் மூன்றாவது பெரிய துறைமுகம்தான் 'புஜைரா' துறைமுகம். இங்கிருந்துதான் கப்பல்களுக்கு எரிபொருள் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் தாக்குதல் நடத்தியிருக்கிறது ஈரான். இதனால் சரக்கு கப்பல் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இந்தியாவுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவை நேரடியாக எதிர்த்து சண்டை போட்டு ஜெயிக்க முடியாது. எனவே, அமெரிக்காவை போரில் நீண்ட காலத்திற்கு ஈடுபட வைத்து, அதன் மூலம் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி, சண்டையில் வெற்றி பெற ஈரான் திட்டமிட்டிருக்கிறது.

பொருளாதார மையங்கள் மீது குறி
இதனால், அமெரிக்காவின் பொருளாதார மையங்கள் அனைத்தையும் ஈரான் தாக்கி வருகிறது. அமெரிக்க கப்பலுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், வங்கிகள் என ஒன்று விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தங்கள் இருக்கின்றன. இந்த ராணுவ தங்கள் மீதும், அதற்கு உதவும் எரிபொருள் கிடங்குகள், ஆயுத கிடங்குகள் மீதும் ஈரான் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது.
துபாய் தாக்குதல்
அப்படித்தான் இன்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள, 'புஜைரா' துறைமுக பகுதியின் மீதும் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில், ஜே.எஸ்.டபிள்யூ, மெனா மற்றும் நாப்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான சேமிப்பு பகுதிகள் சேதடைந்துள்ளன. நாப்தாவின் சேமிப்பு கிடங்கில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, புஜைரா முனையத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவுக்கு சிக்கல்
இந்தியா கச்சா எண்ணெய் தேவைகளுக்கு 88% இறக்குமதியைதான் நம்பியிருக்கிறது. எனவே, இந்த எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நம்முடைய எல்பிஜி தேவையில் 40%-ஐ ஐக்கிய அரபு அமீரகம்தான் பூர்த்தி செய்கிறது. அதிலும் புஜைரா முனையம், இந்தியாவுக்கான எல்பிஜி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முனையம் செயல்படாமல் போனால், எல்பிஜி கிடைப்பது சிக்கலாகும்.
ஏற்கெனவே கேஸ் விநியோகத்தில் சிக்கல் இருக்கிறது. இந்த நேரத்தில் புரைஜா முனையம் முடங்கியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாற்று பாதை மீது தாக்குதல்
பொதுவாக கச்சா எண்ணெய் ஹர்முஸ் நீரிணை வழியாகத்தான் இந்தியாவுக்கு வரும். ஆனால், இந்த பாதை முடங்கியிருக்கிறது. இதற்கு மாற்றுதான் புஜைரா முனையம். ஆனால், தற்போது இந்த மாற்று பாதை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வதில் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் உள்ள இன்னொரு பிரச்சனை, கச்சா எண்ணெய் விலை உயர்வுதான்.
இந்திய நிறுவனம் மீது தாக்குதல்
மேலே குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களில், ஜேஎஜ்டபிள்யூ என்பது இந்திய நிறுவனம். இது இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை எளிமையாக கொண்டுவரும் வேலையை செய்து வந்தது. இப்போது இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் எண்ணெய் விலை உயரும். இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும்.
-
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்












Click it and Unblock the Notifications